அப்பாவின் உடலில்
ரெம்ப வலி இருந்தது
அம்மா
இரவு வெகு நேரம் வரை
அவருடைய கை , கால்களை
அமுக்கி விடுவாள்
அப்போது
அவர் தூங்கிப் போவார்
பிறகு
அவள் ஒருபோதும்
வலியை அறியாதது போல
தூங்கி விடுவாள்
அது ஒரு மர்மமான வலியாக இருந்தது
ஒருவேளை அதன் காரணம்
அம்மா மட்டும்
அறிந்ததாக இருக்கலாம்
ஆனால் யாரிடமும்
அவள் சொன்னதில்லை
அப்பாவின் வலியானது
என் வரை வந்து சேர
பல ஆண்டுகள் ஆனது
கிட்டத்தட்ட என் வயதின் வருடங்கள்.
அது வந்தது
மலை நதி காட்டைக் கடந்து
தினமும் நான் பார்க்கிறேன்
ஒரு நோய்வாய்ப்பட்ட மனிதன்
வந்து கொண்டிருக்கிறார்
ஏதோ நீண்ட பயணத்தால்
தம்முடைய சில சொந்த ஜனங்களைத் தேடிக் கொண்டு.
ஹிந்தியில் : மங்கலேஷ் டபரால்
தமிழில் : வசந்ததீபன்