எனக்குள் இருக்கும் என்னை
என்ன ஆனாலும் எனக்குள் இருக்கும் என்னை
எப்படி ஆனாலும் எனக்குள் இருக்கும் என்னை
நான் அறிந்து கொள்ள
அன்றாடம் மறவாமல் பேசும்
அந்தப் படிகட்டுகளுக்கும் தெரியும்
அவளோடு பயணித்த
அகம் சார்ந்த பயணத்தில் கடைசி வரை
அவள் பயணிக்கவே இல்லை!
முடிவில்லாப் பயணத்தில் படிக்கட்டுகள்
வருவதும் போவதும் மீண்டும் புதியவை
வருவதும் போவதும்
பேசிக் கொண்டே இருப்பேன்
மொழி இருக்கும்வரை நான் இருக்கும் வரை
அவள் இருக்கும் வரை
பேசி என்ன ஆகப் போகிறது ஒன்றுமில்லை
பேசாமல் என்ன ஆகப் போகிறது ஒன்றுமில்லை
ஒன்றுமேயில்லை என்பதறிய ஒன்றுமில்லாதவைகளை
ஒன்றுமில்லாமல் செய்து கொண்டே இருக்கிறேன்
ஒன்றுமில்லாமல்!

- பூராம்

Pin It