அற்புதத்தில் இருந்து விடிந்து விடும்
நம்பிக்கையை நம்புகிறேன்
எதிலிருந்து தொடங்குவது
ஏகாந்தம் போதுமான அளவு வாய்த்தாயிற்று
இன்றும் கண்களுக்கெட்டிய
கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி
கடந்து தான் உலகம் எட்டிப் பார்க்கிறேன்
உண்மைக்கு மிக அருகே இருப்பது
எப்போது எது வெடிக்கும் என்பது போன்று
அன்பெல்லாம்
அவரவர்க்கானது என்றாகினும்
ஆதுரம் செவ்வக முகங்களைக்
கொண்டிருக்கிறது
தனி தனியே கூடிய கூட்டத்தில் பயமே தவம்
தாகம் தகர்க்கும் வரம் ஒன்றை
முகத்தில் மூடிக் கொள்ளலாம்
இந்த சைனாக்காரன் நாட்களில்
சித்திரம் களைந்து வெளியேறி
மூச்சு வாங்குகிறேன்
இன்னும் எத்தனை
கொண்டை ஊசி வளைவுகளோ.....!

- கவிஜி

Pin It