உன்னிடமிருந்து தான் உலகம் துவங்குகிறது
கவனமாய் கையாள்
நீ ஒதுங்க அதுவும் உன்னை ஒதுக்கும்

*
அனாதை பிணங்களாய்
ஆண்களின் கவிதைகள்
முகநூல் மயானம் மோசம்

*
உளறுபவர்கள் கூட தப்பித்துக் கொள்வார்கள்
அதற்கு ஒத்து ஊதுபவர்கள்
உருப்படுவதேயில்லை

*
சாமி கும்பிடத்தான்
உங்களுக்கு பிடித்திருக்கிறது
எனக்கு சாமியையே பிடித்திருக்கிறது

*
பேரழகிகள் சமைக்கிறார்கள்
பித்துக்குளிகள்
வெறுமனே இமைக்கிறார்கள்

*
வெடித்தழுதவன் கண்ணீரில் கடவுள்
சித்திரம் களைத்து விடாத
சிற்பத்து குமுறல் அது

*
மரணம் மகத்தான தத்துவங்களை
விட்டு செல்கிறது
மனம்தான் மரணத்தையே இறுக
கட்டிக் கொண்டிருக்கிறது

*

- கவிஜி

Pin It