கொள்ளை அழகொடு குண்டு கரிச்சான்
உள்ளங் கவர்ந்தே உலவிய திங்கே
கண்களைப் பறிக்கும் கரிய உடம்பில்
வெண்ணிறப் பட்டை விரியும் காட்சி
பறக்கும் அழகைப் பார்ப்பது மின்பம்
சிறகுகள் விரிக்கையில் சிந்தும் வண்ணம்
வாலை விறைப்பாய் மேலே தூக்கிச்
சோலையில் திரியும் சொக்கத் தங்கம்
சீழ்க்கை ஒலியோர் சிறப்பு அழைப்பாம்
வாழ்க்கைத் துணையை வருடும் இசையாம்
பறவைகள் படைப்பே பார்க்கத் தூண்டும்
சிறப்பாம் வண்ணச் சேர்க்கையின் வார்ப்போ
ஆணே என்றும் அழகாம் எனினும்
ஆணவம் அங்கே ஆட்சியில் உண்டோ?
 
- அர.செல்வமணி