மௌனத்திரைக்கு
அப்பக்கமும்
இப்பக்கமும்
சிந்தனைகள் சொல்லாகாமல்
மறைந்து போகின்றன

இரு பக்கமும்
நஷ்டமேதுமில்லை எனினும்
இது
காலம் திணித்த மௌனம்

நண்பா நம்
நட்பின் இனிய பாதையில்
இருமருங்கிலும்
இலுப்பைப்பூ மணம் கமழ
நிழல் தரும் மரங்கள் உண்டு

திரையில் நிழலாடும்
நம் கரிய உருவங்களின்
மானசீக உரையாடல்
எப்போதும் சாத்தியம்தான் !

- ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

 

Pin It