பரந்துணர்தல் பற்றிய உள்ளும் புறமும்
கடலுக்குள்ள கற்பனை
பெருமூச்சுக்கு இடம் ஏது
சிறு சிறு துளிர்ப்புக்கெல்லாம்
அலை தாண்டியும் கடல் இருக்கிறது
பெருங்கடல் குடித்தும்
வறண்ட வெடிப்பின் அடியே
சகியே செத்த மீனுக்குள்ளும் கடல் இருக்கிறது
கரை இன்றி வாழ்ந்திட இன்னும்
கற்றுக் கொள்ளாத சவ்வூடு பரவல்
கடலெங்கும்
நீ முகம் திருப்பிக் கொண்ட இடத்தில்
நீலக்கடல் எப்படி சாத்தியம்
அங்கு ஒன்றுமில்லை
புகைப்படத்துக்குள் இருந்து திரும்பி பார்
குறைந்த பட்சம் புகைப்படத்துக்குள்ளாவது
கடல் உன் ஒரு துளி
நெற்றி சுருக்கத்திலும் ஆரம்பிக்கலாம்....!

- கவிஜி

Pin It