கம்மனாட்டிகள் கேட்டிருக்கிறேன்
எலிமனாட்டிகளை உணர்கிறேன்
உப்பு புளி காரம்
மார்க்ஸ் காந்தி பெரியார்
உவர்ப்பு கசப்பு இனிப்பு
புத்தன் ஏசு நபி
எனக்கு எல்லாம் வேண்டும்
கலவைதான் புரியவில்லை
காதல் கற்பு இறை
புரியவில்லை
மண்டைக்குப் பிறந்தவர்தானே
தர்ம மருத்துவமனையில் நான்.
ராமநவமி கிருஷ்ணாஷ்டமி
சுகபிரசவமா அறுவையா
கபால கிருஷ்ணா

Pin It