நிழல் அசைகிறபோது
வெயில் மறைவதும்
வெயில் மறைகிறபோது
நிழல் அசைவதுமாய்
மாய ஒளி இமைகளில் படர்கையில்
விழிகளில் சாயங்காலத்தின் அந்தியையும்
விரல்களில் பொன்னொளிர் கீற்றையும்
மலர்த்துகிறாய்
சிறு பூங்கொத்தின்
இதழொன்றைக் கிள்ளி
நம் முந்தைய சந்திப்பின்
நினைவாய்ப் பரிசளிக்கிறாய்;
அந்தச் சிறு இதழில்
நீ கிள்ளியெறிந்த நகத்தாரையில்
கசிகிற இதழ்ச்சாற்றில்
கைவழிய நிரம்புகிறது
இப்பெருங்காதல்...

- திருமூ

Pin It