மரம் கூடு
அடைகாக்கும் குருவி
இரண்டாவது மாடி
புல்வெளி
வீட்டை உரசியபடி தவழும் மேகங்கள்
தரையில் வெல்வெட் பூச்சிகள் .
எல்லோரும் ஆவலோடு காத்திருக்கினறனர்
மழைத்துளிக்கு என்ன நிறம் கொடுக்கலாம்
யோசித்துக் கொண்டிருக்கிறாள்.
அப்பாவின் நிறம் கொண்ட மேகங்களும்
அவள் உத்தரவிற்குக் காத்திருக்கிறது.
கண்களில் திடீரென பளிச் மின்னல் வெட்ட
விரல் நகத்திலிருந்து
தூரிகையில் சுரக்கிறது
ஓர் அமுதத்துளி
கண் சிமிட்டுகிறாள் யாழினி
பொழியத் துவங்கிவிட்டது
யாழினியின் மேகம்
வண்ணங்களை துளித்துளியாய் .

- சதீஷ் குமரன்

Pin It