வைகறையின் முதற்பனித்துளியிலும்
படிந்துள்ளது
அமிலங்களின் வீரியம்

கறக்கின்றபோதே
உறைந்துள்ளது
ஆவின்பாலில்
வீரிய ஊக்கியின் எச்சம்

வளியில் ஊடாடிய கறைகளில்
களங்கமாகியே
மேனியைத் தொடுகிறது
புலரியின் முதற்கதிர்

ஒவ்வொரு குழவியும்
பிறக்கின்றன
முற்பிறப்பு விழைவின்
எஞ்சிய நஞ்சுடனேயே

பரிசுத்தத்திற்கான
ஒப்புமை ஏதுமில்லாதபோது ,
எப்படி உணர்த்துவேன் ...
என் தெள்ளிய காதலை அவளுக்கு

- கா.சிவா

Pin It