ஒரு மழை நாளின்
குடைக்குள் நடக்கையில்....
என் மீது எவ்வளவு அன்பு ?
எனக் கேட்டாய்....
இரு கைகள் இயன்றவரை விரித்து
இவ்வளவு என்றேன்...
புன்னகைத்தாய்....
உனக்கு ? என வினவினேன்...
கை நீட்டி, சிறிது மழை பிடித்து
முகத்திலெறிந்து சிரித்தாய்...
வழிந்தது உன் பிரியம்...

- பாலமுருகன் வரதராஜன்

Pin It