sivaசோமுகாசூரனிடம் வேதங்களை
மீட்கப் போன மச்சம் -
அதில் பாதியை மட்டுமே
கழிவறையில் இருந்து கண்டுபிடித்தது.

மேருமலையையே தாங்கிப் பிடித்தக் கூர்மம்
அசுரர்களின் வியர்வைபட்டு
ஓடுகளை உடைத்துக்கொண்டது.

இரண்யாக்கதானை கொல்லப்போன வராகம்
அவன் ஊர் மந்தவெளியில்
நிரந்தர தஞ்சமடைந்தது.

பிரகலாதனுக்கும் இரண்ணியனுக்கும்
சதைமாமிசத்தைக் கொடுத்துவிட்டு
எலும்புகளை நக்கிக்கொண்டிருந்தான்
நரசிம்மன்.

முன்றடி மண்ணுக்காக
வாமணன்-மாவலிச் சக்ரவர்த்தியிடம்
மனைவியைக் கூட்டிக்கொடுத்தான்.

தாயையும் தம்பிகளையும்
கொன்ற பரசுராமன்
இரத்தவெறி அடங்காமல் கோடாரியால்
தன் குறியைத் தானே வெட்டிக்கொண்டான்.

கர்ப்பத்தோடு ஜானகியை
காட்டில் விட்டுவிட்டு
சிகப்பு விளக்குப் பகுதியில்
ஊர்மேய்ந்து கொண்டிருந்தான் இராமன்.

துஷ்டர்களை அழிக்கச்சொல்லி
தன்னிடம் முறையிட்ட பூமாதேவியை
பலாத்காரம் செய்தான் பலராமன்.

கம்சனை அழிக்கப்புறப்பட்ட கிருஷ்ணன்
ஆயர்பாடியில் இருந்து
மதுரை போகும் வழியில்
ஒரு மாட்டு வண்டியில்
அடிபட்டு இறந்தான்.

பாட்டாளி வர்க்க
சர்வாதிகாரத்தை ஒழிக்க
வெள்ளை மாளிகை நாய்களின்
சிறுநீருக்குப் பிறந்த கல்கி
தன்னுடைய மலத்தைத்
தானே தின்று
இந்து இந்தியா
தூய்மை இந்தியா
மேட் இன் இந்தியா
என்று குரைத்தது.