modi cartoon 600பாசிஸ்டுகள் தங்களை
அழகாகக் காட்டிக் கொள்ள
அடுத்தவனின் முகத்தில்
கரியைப்பூசி மகிழ்கிறார்கள்.

பாசிஸ்டுகள் தங்களை
அறிவு ஜீவிகளாகக் காட்டிக்கொள்ள
அடுத்தவனின் மூளையை
வலுக்கட்டாயமாகத்
திருடித் தின்கிறார்கள்.

பாசிஸ்டுகள் தங்களை
கடவுளாகக் காட்டிக் கொள்ள
ஆள்வைத்து தங்களுக்குத் தாங்களே
கோயில் கட்டிக் கொள்கிறார்கள்.

பாசிஸ்டுகள் தங்களை
தீர்க்கதரிசிகளாகக் காட்டிக்கொள்ள
இல்லாத எதிர்காலத்தை இருப்பதாக
மக்களை ஏய்க்கிறார்கள்.

பாசிஸ்டுகள் தங்களை
வீரனாகக் காட்டிக்கொள்ள
எதிரிகளையும் அவர்களுக்கான வரலாறையும்
அவர்களே கட்டமைக்கிறார்கள்.

பாசிஸ்டுகள் தங்களை
மீட்பானாகக் காட்டிக்கொள்ள அவர்களே
வழிநெடுகிலும் குழிகளை
வெட்டிவைத்திருக்கிறார்கள்.

பாசிஸ்டுகள் தங்களை
சிறந்த மேய்ப்பானாகக் காட்ட
அதிகாரத் தாழ்வாரங்களில்
அடிமை ஆடுகளை
உட்கார வைத்திருக்கிறார்கள்.

பாசிஸ்டுகள் தங்களை
கருணை உள்ளவர்களாகக் காட்ட
அடிபட்ட நாய்குட்டிகளின் இரத்தத்தை
நாக்கால் நக்கி சுத்தம் செய்கிறார்கள்.

பாசிஸ்டுகள் தங்களையே உலகமாகவும்
உலகத்தையே தாங்களாகவும் நினைக்கிறார்கள்
தங்களின் உடல்முழுவதும்
தங்களுடைய பெயர்களையே எழுதி
அதையே ஆடையென நம்பச் சொல்லி
உங்கள் முன் நிற்கிறார்கள்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.