கீற்றில் தேட...

sevalai madu

1.

ஆளரவமற்ற மந்தையில்
அசரீரியாய் ஒலிக்கிறது
முன்பொரு நாள்
மூதாதையர் சுழற்றிய
தாயக்கட்டைகளின் குரல்.

2.

ஆணியில் தொங்கும் சலங்கை
அசைந்து அசைந்து
அவ்வப்போது ஞாபகமூட்டும்
செத்துப்போன செவலை மாட்டை.

3.

வணங்காமுடிகளையும்
கவிழ்த்துவிடுகிறது
சவரக்காரனின் சிறுகத்தி.

- ஸ்ரீதர்பாரதி