கீற்றில் தேட...

dalit oldmanசூரியனை சூரியனாகப் பார்க்க
சொல்லப்பட்டிருக்கிறது
நிலவை நிலவாகப் பார்க்க
சொல்லப்பட்டிருக்கிறது
நாயை நாயாகப் பார்த்த கண்கள்
மனிதனை ஏன் வெறுப்பாகப் பார்க்கின்றன
மனிதனை ஏன் சாதியின்
துண்டுகளாகப் பார்க்கின்றன
மதங்களின் மாமிசங்களாக
ஏன் பார்க்கப்படுகின்றன
எப்படி சொல்லித்தருகிறோமோ
அப்படித்தான் புரிந்துகொள்ளும்
இன்றைய நாள்
காலம் மாறிவிடவில்லை
பழைய பாடங்கள் மீண்டும் நடத்தப்படுகிறது
பார்த்துக்கொண்டிருக்கின்றோம்
பழைய காலத்தைப் போல
அடங்கிப் போக மாட்டோமென்று
அவர்களுக்குப் புரிந்திருக்கிறது
நாம் நிராயுதபாணியாக
நிற்கவில்லையென்று
நாம் காலத்துக்கு உணர்த்தியிருக்கின்றோம்
அவர்களுக்கு வேறு வழியில்லை
நம் கைகளோடு கை குலுக்க வேண்டும்.