மார்க்சியம் தன்னைச் செழுமை யாக்கி
நீர்க்க முயன்றோர் நேராய் எதிர்த்தோர்
வாதங் களைநுண் ணறிவால் தகர்த்த
மேதகு அறிஞர் மகாலெனின் இவரே
வெற்றியின் உறுதியைப் பிறந்த நாளில்
பெற்றிடத் தோழர் முனைந்ததில் நாணி
அலுவல் மறுத்து வெளியேறி னாரே
(மார்க்சியத்தை மேலும் செழுமையாக்கியும், அதை நீர்த்துப் போகச் செய்ய (மறைமுகமாக) முயன்றவர்களையும், நேராய் நின்று எதிர்த்தவர்களையும், தன்னுடைய நுண்ணறிவு கொண்ட வாதத் திறமையால் தகர்த்து எறிந்த மேன்மை மிக்க அறிஞர் லெனின் ஒரு மாமனிதரே. புரட்சியின் வெற்றியை அவரது பிறந்த நாளில் கொண்டாட வேண்டும் என்று தோழர்கள் ஒரு கூட்டத்தில் தீர்மானத்தைக் கொண்டு வந்த பொழுது (அப்புகழ்ச்சிக்கு) நாணி, அக்கூட்டத்தை விட்டு வெளியேறினார்.)
- இராமியா