நீண்ட ஒரு இரவில்
விழிகளின் வெளிச்ச எல்லையை மீறி
கண்கள் நிலைத்திருந்தன
சமாதானமற்ற வாக்குறுதிகள் மீறப்பட்டதன் வலி
இருள் அடைக்கும் வரை கேவுதல்
கேட்க முடியாது தொடர
பின்பொழுதின் விழிகள் வாசித்து அயர்ந்ததில்
உண்டான கருவளையத் தடம் மறைய
வட்ட வட்ட வெள்ளரியாய் நினைவின்
ஈரம் பரவுகையில்
நம்பிக்கையற்ற உன் மறு உரையாடல்
ஒத்திவைக்கிறது
என் விழியின் ஈரத்தை
- ரேவா (