சிறைப் பறவையான பின்பும்
வனத்தில் தவமிருந்த
சீதை…

பந்தயக்கட்டத்தில்
சூது பொருளாய் நின்ற
பாஞ்சாலி…

கொங்கையை கிள்ளி
நகரையே தீக்குள் வைத்த
கண்ணகி..

தலையில் தாங்கி
எமனிடம் எகிறிய
சாவித்திரி…

கணவனுக்காய்
வாழ்ந்தவள்களின்
கதைகளைக் கேட்டே வளர்ந்தவள்...

சுயமாய் செய்வதற்கு
ஏதுமற்ற சூன்யத்தில்
மனைவி என்ற அதே முகமூடி தரித்து
துருத்தி நிற்கும் தசைகளை
கணவனுக்கு தின்னக் கொடுத்துவிட்டு

புணர்தல் நிமித்தமாய்
புணர்ந்து அடங்கியவனின்
பொழுதுக்கு சாட்சியாய்
விழித்தெழுகிறாள் நித்தமும்!

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.