அவர்கள் எங்களைத் துரத்தாமல்
இருந்திருந்தால் நான் எனக்குரிய
நிலத்திலேயே பிறந்திருப்பேன்
அவர்கள் மட்டும் எங்களை
மதப்படுத்தாமல் இருந்திருந்தால்
எங்கள் நிலத்தின் மலரையோ
செடியையோ நன் என்
பெயராகக் கொண்டிருப்பேன்
எங்கள் மூதாதையர் வழி வாழ்ந்து
பாரம்பரிய உடைதரித்து
மணந்திருப்பேன்
நானும் என் பிள்ளையும் எங்களின்
தாய்மொழி பேசி மகிழ்ந்திருப்போம்
ஆக்கிரமிக்கப்படாத எங்களின்
நிலத்தில் விளைந்திருக்கும்
வாழையையும் சேனையையும்
ருசித்திருப்போம்
அன்று அவர்களுக்கு மூக்கு
வியர்க்காமல் இருந்திருந்தால்
இன்று நாங்கள் எங்களுக்கே
உரிய வாழ்வை வாழ்ந்திருப்போம்...

- அருண் காந்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)