பசுந்தோல் போர்த்திய பன்றியின்
இறுதி ஊர்வலத்தில்
நரிகளின் பெருங்கூட்டம்..!

இரத்த வெறி அடங்காத
மிருகத்தின் கொடும் பசிக்கு
பலியான
பச்சிளங்குழந்தைகளின் ஆன்மா
அந்த மாநகர் எங்கும்
சபித்தபடி அலைந்திருந்தது..!

குருதியில் நனைந்த போதும்
கைப்பிடித்த கொடியை
தொப்புள் கொடியாக
நினைத்தவனின் மரணம்
இழிவுபடுத்தப்பட்டது..!

சாய்ந்து கிடக்கும் மதவெறியின்
சடலத்தின் மீது போர்த்தவா
எம் மண்ணின் தேசியக் கொடி..?

- அமீர் அப்பாஸ்