கல்லில் சிலைவடித்து
கண்டதெல்லாம் கடவுளாக்கி
கடும் விஷமாம் சாதியமைத்து
கணக்கில்லாக் கொடுமைகளுக்கு
காரணமாம் வர்ணம் தீட்டி
கயநெறி சொன்னவர் எல்லாம்
நாட்டை ஆள திண்ணமாய்
வந்தானே!

காடு கரம்பெல்லாம் உழைத்து
கண்ணீரையும், செந்நீரையும் சிந்தி
கண்டத்தையே காக்கும் உழவன்
எல்லாம் தாழ்ந்தவனாம்;
உழைத்து வாழ வக்கில்லாமல்
கடவுளிடம் பேசுவதாகக் கூறி
கண்டதையே பேசி காசு பார்க்கும்
சோம்பேறி உயர்ந்தவனாம் !

கல்லுக்கு கற்பூரம் காட்ட ஒருசாதி !
கழிவறை சுத்தம் செய்ய ஒருசாதி !
செருப்பு தைக்க வேண்டுமாம் ஒருசாதி;
அந்த செருப்பை போட அவனுக்கு
உரிமையில்லையாம் அதுவும் சாதி !

கிணறு வெட்ட வேண்டுமாம் ஒருசாதி
அதிலே அவன் தண்ணீர் எடுத்தால்
தீட்டாம் அதுவும் சாதி !
ரோடு போட வேண்டுமாம் ஒருசாதி;
அந்த ரோட்டிலே அவன் நடந்தால்
காலை வெட்டுவேன் என்பானாம்
அதுவும் சாதி !

முகச்சவரம் செய்ய வேண்டுமாம் ஒருசாதி;
அவன் முகத்திலே விழித்தால்
தீட்டாம் அதுவும் சாதி !
வீதியெல்லாம் அபகரிப்பான் அது சமூகநீதி?
அந்த வீதியை சுத்தம் செய்பவனிடம் மட்டும்
பார்ப்பானாம் சாதி! இது என்னடா நீதி?

அரசனானாலும், ஆண்டியானாலும்
செத்தப்பின் நாறத்தான் செய்யும் பிணம்
அந்த பிணத்தை எரிப்பவனும், அந்த
பிணத்தை சுத்தம் செய்பவனும்
செத்தப்பின் சுடுகாடு செல்ல இல்லையே
ஒரு பொதுவீதி !

கழிவறை சுத்தம் செய்ய வேண்டுமாம் ஒருசாதி;
அவன் அருகிலே சென்றால் நாற்றம் எடுக்கும்
என்பானாம் இதுவும் சாதி !
நாற்று நடவேண்டுமாம் ஒருசாதி ;
அந்த நாற்று நடுபவன் எல்லாம்
நாதி அற்றவவனாம் இதுவும் சாதி !

கருத்த நெஞ்சம் கொண்டு ;
கல்லிலே கடவுள் கொண்டு;
கயநெறி ஊருக்கு சொல்லி;
கன்னக்கோல் உருவம் தைத்து;
உயர்ந்தவன் என்றும்; தாழ்ந்தவன்
என்றும் உபதேசம் சொல்லும்
பார்ப்பனியத்திற்கு இதுதானே
நீதி.....

- அங்கனூர் தமிழன் வேலு

Comments

1 comment

1
Iyyer
அருமை .... மிக அருமை .....

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.