ஒரு நல்ல மனநல மருத்துவர் தேவை. சைக் கோவை கூட தனது கவுன்சிலிங்கால் திருத்தக்கூடியவராக அவர் திகழ வேண்டும். சிக்கலான வழக்குகளை கூட திறம்பட பேசி, மனம் மாற்றக் கூடியவராக இருப்பது முக்கியம். அப்படிப்பட்ட ஒரு மனநல மருத்துவர் கிடைத்தால் அவரை டெல்லிக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
அங்கு மிக மிக மோசமான ஒரு மனநோயாளி இருக்கிறார். அதுவும் ஜனாதிபதி மாளிகை யில்! குறிப்பாக ஜனாதிபதியின் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அவர்தான் "பிராணனை எடுக்கும் புகழ்' பிரணாப் முகர்ஜி.
அஜ்மல் கசாப், அப்சல் குரு இவர்களைத் தொடர்ந்து தங் களை நடுநிலைவாதிகளாக காட் டிக் கொள்ள எடுக்கும் அடுத்த அஸ்திரக் கொலைகள்தான் சந் தன வீரப்பனின் கூட்டாளிக ளுக்கு தூக்கு. சந்தன வீரப்பனை இவர்களில் சிலர் பார்த்தது கூட இல்லையாம். ஆனாலும் இவர்க ளைத் தூக்கிலிடுவதன் மூலம் மக் களின் உணர்வுகளுக்கு மதிப்பளி த்து விடுவார்களாம். கருணையே இல்லாத ஒருவரிடம் கருணை மனு அளிப்பதுதான் இங்கு வேதனை.
அடுத்த தாக... இவர்கள் எங்கு கை வைக்கப் போகிறார்கள் என்று மக்களால் யூகிக்க முடிகிறது. ஆம்! இத்தாலி சோனி யாவின் அடுத்த குறி... விடுதலைப் புலிகள் என்று குற் றம்சாட்டப்பட்டிருக்கும் ராஜீவ் கொலையாளிகள் என்று யூகிகப்படும் முருகன், சாந் தன், பேரறிவாளன்!
எடுத்த எடுப்பிலேயே இவர் களை தூக்கில் தொங்க விட்டு விட்டால் பாராளுமன்றத் தேர்த லில் மக்கள் கந்தலாக்கி காயப் போட்டு விடுவார்கள். 40 தொகு திகளில் ஒரு தொகுதிக்குள் கூட காங்கிரஸ் கணவான்கள் நுழைய முடியாது.
இளங்கோவன், வாசன் கோஷ் டியெல்லாம் இத்தாலிக்கு ஓடி ஒளிய வேண்டியதுதான். பொ றுத்துப் பார்த்தார்கள். வீரப்பன் கூட்டாளிகள் என்று சொல்லி ஏற்கெனவே ஒன்பது வருடங்கள் சிறையில் வாடியவர்களை தூக் கில் தொங்க விட முடிவு செய்து விட்டார்கள்.
அப்சல் குரு எப்படி நேரடி குற்றவாளி இல்லையோ... இந்த நான்கு பேரும் அப்படித்தான். நேரடி குற்றவாளிகள் அல்ல. இன் னும் சொல்லப் போனால் வீரப் பன் காட்டில் ஆடு மேய்க்கும் அப்பாவியும் இந்த நால்வரில் ஒருவர்.
முருகன், சாந்தன், பேரறிவா ளன் இவர்களும் நேரடி குற்றவா ளிகள் அல்ல. பேட்ரி வாங்கி னான்; லைட் வாங்கினான்; தீப் பெட்டி வாங்கினான்; கல் கோனா மிட்டாய் வாங்கினான். எனவே ராஜீவ் காந்தி இறந்தார் என்று குற்றம் சாட்டப்பட்ட வர்கள்.
இவர்கள் கிட்டத்தட்ட 20 வரு டங்களுக்கு மேல் சிறையில் வாடு பவர்கள். ஒரு ஆயுள் தண்ட னையை அனுபவித்து கடந்தவர் கள். இவர்களின் கருணை மனு வும், மனுதர்மவாதியிடம் மாட் டிக் கொண்டிருக்கிறது. பேசாமல் இவருக்கு ரப்பர் ஸ்டாம்ப் என்ற பெயரை மாற்றி இரும்பு ஸ்டாம்ப் என்று அழைக்கலாம்!
எங்கே போய்க் கொண்டிருக் கிறோம். இந்தியா ஒரு ஆன்மீக பூமி என்று சொல்லிக் கொள்ள நாம் வெட்கப் பட வேண்டும். ஒட்டுமொத்த உலக நாடுகளும் தூக்கு தண்டனை கூடாது என்று குரல் கொடுத்துக் கொண்டி ருக்க... (கொலைக்கு கொலை தான் நீதி என்பதும் இது பாதி க்கப்பட்டவரின் உரிமையாக்க வேண்டும் என்ற வகையில் மரண தண்டனை வேண்டும் என்பது நமது நிலைப்பாடு என்பது தனி விஷயம். பார்க்க 5ம் பக்க கட்டுரை.)
இந்தியச் சிறைகளில் மணிப்பூர் கயிறுகளை கட்டிக் கொண்டி ருப்பது எவ்வளவு கேவலமான விஷயம்! இது ஒரு அரச பயங்க ரவாதம் இல்லையா?
வின் டி.வி.யின் செய்திகளும் நிஜங்களும் நிகழ்ச்சியில் சகோ. எஸ்.எம். பாக்கர் ஒரு விஷயத்தை ஆணித்தரமாகக் கூறினார். “இது மத்திய அரசும் மனுதர்மவாதியும் ஆழ்ந்து யோசிக்க வேண்டிய விஷயம். சட்டம், சம்பிரதாயம், மண்ணாங்கட்டி என்கிற பெயரில் குற்றம்சாட்டப்பட்டவர்களை பத்து வருடம், இருபது வருடம் சிறையில் அடைத்து விட்டு, பின்னர் கருணை மனு நிராகரிக் கப்பட்டு, தூக்கில் தொங்க விடு வது எந்த வகையில் நியாயம்?
ஒரு குற்றம் சாட்டப்பட்டவர் ஒரே நேரத்தில் ஆயுள் தண்ட னையும் முடித்து மரண தண்ட னையும் அனுபவிப்பது எப்படி நியாயமாகும். விரைந்து வழக்கை விசாரித்து விரைவான தண்ட னையை அறிவிக்க வேண்டும்...'' என்றார்.
கண்டிப்பாக இந்த விஷய த்தை கருணை இல்லாத காங்கிரஸ் அரசு யோசித்து, நடைமுறைப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்; மனிதாபிமான செயலும் கூட.
இப்போதெல்லாம் ஒரு அர சின் நோக்கம் செயல்பாடுகள் உள்ளடி வேலைகள் எல்லாமே மக்களுக்கு தெளிவாகத் தெரிகிறது. அவர்களை ஏமாற்ற முடியாது. கடுங் கோபம் கொள்கிறார்கள். அந்த கோபம் தேர்தலில் எதிரொலிக்கிறது.
இலங்கை தமிழர்கள் விஷயத் தில் இந்தியாவின் கொடூர முகம்! இஸ்லாமியர்கள் விஷயத்தில் பாராமுகம்! அடித்தட்டு மக்க ளைக் கண்டுகொள்ளாமல் விலைவாசி, பெட்ரோல் & டீசல் ஆகியவற்றின் விலை ஏறுமுகம்... என சுத்தமாக நிர்வாகத் திறனற்று கிடக்கிறது மத்திய அரசு!
யார் பிரதமர் என்பதிலும் இப்போது குழப்பம். இந்தியாவில் இத்தாலி ஆட்சி நடக்கிறதோ எனும் ஐயப்பாடு! கோடான கோடிகளில் நடக்கும் ஊழல்! இப்படி பெயர் கெட்டு குட்டிச் சுவராகிக் கிடக்கிறது காங்கிரஸ் அரசு.
இத்தாலியில் முசோலினியை கட்டி தொங்க விட்டது போலவே... அப்பாவி முஸ்லிம்களை கட்டித் தொங்க விடுவது, அப்பாவி இந்தி யர்களின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்படுவது என ஆடாத ஆட்டம் ஆடுகிறார்கள்.
இவர்கள் தேர்தலில் மக்களால் புறக்கணிக்கப்படுவார்கள் என் பது இங்கு கிடைக்கும் தண் டனை. ஆனால் இந்த பாவங்க ளுக்கெல்லாம் இறுதி நாளில் இறைவன் கொடுக்கும் தண் டனை மிக கடுமையாக இருக் கும். அதிலிருந்து இவர்கள் தப் பவே முடியாது. எனவே இறை வனை அஞ்சிக் கொள்ளட்டும்.
- எம்.ஏ. கென்னடி (எ) அப்துல் ரஹ்மான்