2002ல் நடந்த குஜராத் முஸ்லிம் இனப்படு கொலை சம்பவங்களில் முக்கிய இடத்தைப் பிடித்தது குல்பர்க் சொûஸட்டி படுகொலை. இந்த குடியிருப்பு பகுதியில் இருந்த பலர் கொல்லப் பட்டு, அக்குடியிருப்பு பகுதியும் மோடியின் குண்டர்களால் தீக்கிரையாக்கப்பட்டது.

குல்பர்க் சொûஸட்டியில் வசித்த முன்னாள் காங்கிரஸ் எம்.பி. இஹ்சான் ஜாஃப்ரி கண்டந் துண்டமாக வெட்டப்பட்டு, எரித்து கொல்லப்பட்டார். இந்த வழக்கில் மோடி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களை குற்றம் சாட்டி இஹ்சான் ஜாஃப்ரியின் மனைவியான சகியா ஜாஃப்ரி தொடர்ந்த வழக்கில்தான் மோடி யையும் அவரது அமைச்சரவை சகாக்களையும் விசாரிக்க ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய் வுக் குழுவிற்கு உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.

சகியா ஜாஃப்ரிக்கு உறுதுணை யாக இருந்து வழக்கை நடத்தி வரு கிறார் பிரபல மனித உரிமை ஆர் வலரும், கம்யூனிஸம் காம்பக்ட் என்ற பத்திரிகை ஆசிரியருமான தீஸ்தா செட்டில் வாட். இவர் நடத்தி வரும் நீதி மற்றும் அமைதிக்கான மையம், 2002 கலவரத்தில் பாதிக் கப்பட்டவர்களுக்காக சட்ட உதவி யும் செய்து வருகிறது.

குல்பர்க் சொûஸட்டி வழக் கில் மோடிக்கு எதிரான வலுவான ஆதாரங்கள் இருக்கிறது என கடந்த 18ம் தேதி அஹமதாபாத் தில் செய்தியாளர்களிடம் தெரி வித்துள்ளார் தீஸ்தா!

மோடியை ஏற்கெனவே விசாரித்த சிறப்பு புலனாய்வுக் குழு, மோடி குற்றமற்றவர் என அவருக்கு நற்சான்று அளித்திருந் ததை கடுமையாக விமர்சித்திருந்த தீஸ்தா செட்டில் வாட்டிடம் அது குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது, “எங்களிடம் வலுவான பல வழக்குகளும், நம்பர் 1 குற்ற வாளியான மோடி உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு எதிரான பல மான ஆதாரங்களும் உள்ளன...'' என தெரிவித்துள்ளார்.

“சிறப்பு புலனாய்வுக் குழு சீலி டப்பட்ட தனது அறிக்கையை தாக்கல் செய்து ஒரு வருடம் கழிந் துள்ள நிலையில், வழக்கு தொடர் பான அனைத்து ஆதாரங்களை யும் நீதி மன்றத்தில் சமர்ப்பித்தி ருக்கிறோம். இந்த நிலையில் எங் கள் எதிர்ப்பு மனு தொடர்பான எந்த விபரத்தையும் இப்போது பகிரங்கப்படுத்த முடியாது...'' என் றும் செய்தியாளர்களிடம் கூறி யுள்ளார் தீஸ்தா.

2002 கலவரம் குறித்து உச்ச நீதி மன்றத்தின் வழிக்காட்டுதலின்படி சிறப்பு புலனாய்வுக்குழு விசாரித்த 9 வழக்குகளில் நரோடா காம் மற் றும் குல்பர்க் சொûஸட்டி வழக் குகளின் விசாரணையை மேற் கொள்ள சிறப்பு புலனாய்வுக் குழு மிகவும் காலதாமதம் செய்து விட் டது என்றும் புலனாய்வுக்குழுவை தீஸ்தா குற்றம் சாட்டினார்.

மேலும், “குல்பர்க் சொûஸட்டி வழக்கு விசாரணை ஏறக்குறைய முடிவடையும் தருவாயில் இருந்த நிலையில், புலனாய்வுக்குழு, விசாரணை ஆவணங்கள் அனைத் தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என விசாரணை நீதி மன்றம் அளித்த உத்தரவை எதிர் த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதன் விளைவாக விசாரணை நிறுத்தி வைக்கப்பட் டது...'' என்றும் தெரிவித்துள்ள தீஸ்தா, உச்ச நீதிமன்றத்தின் வழிக்காட்டுதலின்படி, சிறப்பு நீதிமன்றங்களில் நடைபெற்ற கலவர வழக்குகள் பலவற்றின் தற்போதைய சட்ட ரீதியான நிலை குறித்த விபரங்களையும் செய்தியாளர்களிடம் தெரிவித் துள்ளார்.

பல்வேறு மிரட்டல்களுக்கு மத்தியிலும் மோடிக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என் பதில் ரொம்பவே உறுதி காட்டி வருகிறார் தீஸ்தா.

- ஹிதாயா