எதிர் வரும் மார்ச் மாதம் 7 ஆம் தேதி டெசோ மாநாட்டை டெல்லியில் நடத்த டெசோ அமைப்பு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னையில் கடந்த 25ந் தேதி திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் டெசோ உறுப்பினர்களின் கூட்டமும் நடைபெற்றது.

டெல்லியில் நடைபெற உள்ள மாநாட்டில் பங்கேற்க காங்கிரஸ் கட்சியைத் தவிர்த்து பிற கட்சிக ளைச் சேர்ந்த முக்கியத் தலைவர் களை அழைக்க டெசோ அமை ப்பு முடிவு செய்துள்ளதாக தெரிகி றது.

இப்படி காங்கிரஸ் தலைவர்கள் இல்லாத வகையில் மாநாடு அமைய வேண்டும் என்பது கரு ணாநிதியின் ஐடியாவாம். அதே சமயம் பாஜகவின் முக்கியத் தலைவர்களை மேடையேற்ற டெசோ அமைப்பு முடிவு எடுத் துள்ளது. இதுவும் கருணாநிதியின் ஐடியாதானாம்.

இதன் மூலம் ப.ஜ.க.வுடனான கூட்டணிக்கு தி.மு.க.மூவ் செய்வ தாக அரசியல் பார்வையாளர்கள் அடித்து சொல்கிறார்கள். இந்த டெசோ மாநாடு பாஜகவுட னான புதிய கூட்டணிக்கு அச்சார மாக அமையக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் கிளம்பியுள்ளது.

டெல்லியில் நடைபெற உள்ள டெசோ மாநாட்டில் பாஜகவின் மூத்த தலைவர்களான அத்வானி, சுஷ்மா சுவராஜ், சமாஜ்வாடியின் முலாயம் சிங் யாதவ் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற் கக் கூடும் என்றும் கூறப்படுகி றது.

தமிழகத்தில் அதிமுக தனித்து போட்டி என்று அறிவித்துள்ள நிலையில் டெசோ மாநாடு மூலம் திமுக புதிய கூட்டணிக்கு முயற்சி செய்கிறதோ என்ற சந்தேகம் காங்கிரசார் மத்தியில் எழுந்துள் ளதாகவும் அவர்கள் தி.மு.க வின் அடுத்தடுத்த நகர்வுகளை கண்கா ணிக்கத் தொடங்கி இருப்பதாக வும் சத்திய மூர்த்தி பவன் வட் டாரங்கள் சொல்கின்றன.

அண்மையில் சில்லறை வணி கத்தில் அந்நிய முதலீடு மசோதா வுக்கு ஆதரவு அளித்த திமுக, மதச் சார்பு சக்திகள் ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்ப தற்காகவே காங்கிரசுக்கு ஆதரவு அளித்து வருவதாக கூறியது.

இப்போது அதே மதச்சார்பு சக் திகளை அழைத்து டெசோ மாநா ட்டை நடத்த முடிவெடுத்திருப்ப தோடு, அரசியல் கூட்டணியும் அமைக்க முயற்சிப்பதாகவே தெரிகிறது. இதன் மூலம் மத்தியில் அதிகாரத்தில் இருப்பதற்காகவே இதுநாள்வரை காங்கிரசை ஆத ரித்து வந்திருக்கிறார் கருணாநிதி.

அதே போல டெசோ அமைப் பையும் தனது சுயலநல அரசிய லுக்கு பயன்படுத்தத்தான் அந்த அமைப்பை உருவாக்கியுள்ளார் கருணாநிதி என்ற உண்மையும் மெல்ல வெளிவரத் துவங்கியுள் ளது.

சில்லறை வணிகத்தை பற் றியோ, ஈழத்தமிழர் நலன் பற் றியோ தி.மு.க.விற்கு பெரிய அள வில் அக்கறை இல்லை. ப.ஜ.க தலைவர்களான அத்வானியோ, சுஷ்மா சுவராஜோ தமிழர் நலன் களுக்கு எதிராக இலங்கை அர சாங்கத்தை ஆதரிப்பவர்கள்.

சமீபத்தில் சுஷ்மா சுவராஜ் தலைமையில் இலங்கைக்கு இந்திய குழு பயணம் மேற்கொண்ட போது, ராஜ பக்சே அரசு தமிழர் பிரச்சனைக்காக முன்வைக்கும் நாடாளுமன்ற தேர்வுக்கு குழுவில் தமிழ் தேசிய கூட்டமைப்பை இணைக்கும் முயற்சியை சுஷ்மா மேற்கொண்டார்.

அதாவது, ராஜபக்க்ஷேவின் தூதுவராக செயல்பட்டு,தமிழ் தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவர் ரவுப் ஹக்கீமை சந்தித்து,தமிழ் தேசிய கூட்டமைப்பை எப்படியாவது நாடாளுமன்ற தேர்வுக் குழுவில் இடம் பெறநீங்கள் தான் முயற்சி மேற்கொள்ளவேண்டும்.

ஏனெனில் நீங்கள்தான் கூட் டமைப்பில் இருக்கிறீர்கள். உங்க ளால்தான் இது சாத்தியம் என்றெ ல்லாம் நைச்சியமாக பேசிப்பார்த் தார் சுஷ்மா. இதோடு ராஜாபக்சேவிடமிருந்து பரிசுப்பொருட்க ளும் பெற்று வந்தார்.

ஆக, ராஜபசேவின் ஏஜென்ட் தான் சுஷ்மா. இந்த சுஷ்மாவை வைத்துதான் தமிழர்களை காக் கும் டெசோ மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார் கருணாநிதி. அதுவும் தில்லியில் இந்த மாநா ட்டை வைப்பதன் மூலம் மத்திய காங்கிரஸ் அரசுக்கு செக் வைக்க நினைக்கிறார்.

சீ... சீ... இந்த பழம் புளிக்கும் என்ற வகையில் காங்கிரஸ் கட்சி யுடனான உறவை முறித்துக் கொண்டு 2014 நாடாளுமன்றத் தேர்தலில் ப.ஜ.க.வோடு கூட் டணி வைத்து மத்தியில் ஆட்சி யில் பங்கு பெறலாம் என்று கரு ணாநிதி கணக்கு போடுகிறாரோ என்னவோ.

ஆனால் ப.ஜ.க.எந்த காலத்தில் ஆட்சிக்கு வருவது! கருணாநிதி யின் இந்த கணக்கு தவறாகவே முடியும் என்றாலும் பதவி சுகமே கருணாநிதிக்கு எப்போதும் பிர தானம் என்பதை மட்டும் விளங் கிக் கொள்ள முடிகிறது.

- ஃபைஸ்