ஐஎன்டிஜே முயற்சிக்கு கிடைத்த வெற்றி!
இந்தியாவிலும், தமிழகத்திலும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள வக்ஃபு சொத்துகள் பல்வேறு சமூக விரோதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டும், அபகரிக்கப்பட்டும் உள்ளன. நமது முன்னோர்களால் சமுதாய நலனுக்கும், சமுதாய மேம்பாட்டிற்கும், பள்ளிவாசல், மதரஸôக்களை நிர்வகிக்கப்படுவதற்கும் வழங்கப்பட்டவைகளே இந்த சொத்துகள்.
இந்த சொத்துகளை எப்படி மீட்பது என்ற கவலை அனைத்து முஸ்லிம்களின் மத்தியிலும் இருந்தாலும் அதற்கான முயற்சிகளை சுதந்திர இந்தியாவில் யாரும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அதற்கான முயற்சியில் களம் இறங்கியது. வக்ஃபு நிலங்களை மீட்க வேண்டும், அதற்காக போராட வேண்டும் என்பதே அதன் இலக்கு. திருச்சி மாவட்டத்தை மையப்படுத்தி மாவட்டத் தலைவர் ரிஸ்வான் தலைமையில் மாபெரும் வக்ஃபு நில மீட்புப் போராட்டத்தை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நடத்தியது.
மலைக்கோட்டை நகரே மிரளும் அளவிற்கு மக்கள் வெள் ளம் திரண்டது. சுதந்திர இந்தி யாவில் வக்ஃபு நிலங்களை மீட் பதற்காக நடந்த முதல் மாநாடு இதுதான் என்று பல தலைவர் கள் சிலாகித்தனர்.
இந்த மாநாடு அரசாங்கத் தையும், வக்ஃபு வாரியத்தையும், வக்ஃபு நில ஆக்கிரமிப்பாளர்க ளையும் மிரள வைத்தது. இதனை தொடர்ந்து சில மாதங்களில் தமிழக பொதுத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் எஸ்.எம். பாக்கர்-திமுக தலைவர் கலைஞர், அதிமுக பொதுச் செய லாளர் ஜெயலலிதா ஆகியோ ருக்கு இட ஒதுக்கீடு, வக்ஃபு நில மீட்பு என பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி கடிதம் எழுதி னார்.
இந்த கோரிக்கைகளை செவி சாய்த்து நிறைவேற்றி தருவோம் என வாக்களிக்கும் கட்சியையே இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆத ரிக்கும்; முஸ்லிம்களும் வாக்க ளிப்பார்கள் என்றார் எஸ்.எம். பாக்கர்.
திமுக மற்றும் அதிமுகவின் 2ம் கட்ட தலைவர்கள் ஐஎன்டிஜே தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தினர். இட ஒதுக்கீட்டை யும், வக்ஃபு நில மீட்பையும் மையப்படுத்தியே பேச்சுவார்த் தைகள் அமைந்தன. நமது கோரிக்கைகளை அதிமுகவின் தலைமை செவி சாய்த்தது.
சென்னை எழும்பூர் இம்பீரியல் ஹோட்டலில் நடந்த ஐஎன் டிஜே செயற்குழுவில் பல்வேறு சமுதாய பிரச்சினைகளை மையப் படுத்தி அலசி ஆய்வு செய்யப்பட் டபின், அதிமுக கூட்டணியை இந் திய தவ்ஹீத் ஜமாஅத் ஆதரிக் கும் என முடிவு எடுக்கப்பட்டது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, திருச்சி தேர்தல் பொதுக் கூட்டத்தில், “முஸ்லிம் களுக்கு வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு அதிகரித்துத் தரப்ப டும். மேலும் இட ஒதுக்கீட்டில் உள்ள குளறுபடிகள் முழுமை யாக நீக்கப்படும்...'' என்றார்.
இதனைத் தொடர்ந்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் எஸ்.எம்.பாக்கர் தலைமையில் முஹம்மது முனீர், முஹம்மது சித்தீக், செய்யது இக்பால், அபு பக்கர் ஆகியோர் அடங்கிய குழு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து தனது ஆதரவினை நேரடியாக தெரிவித் தது.
மேலும் சமுதாயக் கோரிக்கை யான வக்ஃபு நிலங்களை மீட் பது, தனி இட ஒதுக்கீடு, கட்டாய திருமண பதிவுச் சட்டம் மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்து தெளிவாக விளக்கினர். இதை கவனமுடன் கேட்ட ஜெயலலிதா, “தான் ஆட்சிக்கு வந்தால் அவை களை நிறைவேற்றுவேன்'' என்று வாக்குறுதி அளித்தார்.
ஜெயலலிதாவின் சந்திப்பிற் குப் பின் அவரின் தனிச் செயலா ளர், துணைத் தலைவர் முஹம் மது முனீரைத் தொடர்பு கொண்டு சமுதாயத்தின் கோரிக் கைகளை தெளிவாக கேட்டறிந் தார். மீண்டும் திருச்சி பொதுக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, “அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வக்ஃபு நிலங்கள் மீட்கப்படும்...'' என்றார்.
முதல்வராக பொறுப்பேற்ற பின்பு நடந்த முதல் பட்ஜெட் கூட்டத் தொடரில் நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் “ஆக்கிரமிக் கப்பட்டுள்ள வக்ஃபு நிலங்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப் படும்...'' எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் எடுத்த முயற்சிக்கு கிடைத்த முதல் வெற்றியாகும். இது வக்ஃபு நிலங்கள் முழுமையாக மீட்கப் பட்டு அதில் முறையான வருமா னத்தை ஏற்படுத்தினாலே முஸ் லிம்களின் பல்வேறு ரீதியான துயரங்களைத் துடைத்துவிட முடியும்!
அரசு செய்த இந்த அறிவிப் பிற்கு முஹல்லா ஜமாஅத்தினர் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பாளர் களை அடையாளம் கண்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சொத்துகளை கணக்கெடுத்து ஆங்காங்கே உள்ள காவல்துறையினரிடம் புகார் செய்ய வேண்டும்.
புகார் மனுக்களையும் முதல் தகவல் அறிக்கையையும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத் திற்கு அனுப்பினால் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு அது உதவியாக இருக்கும்.
நமது கோரிக்கைகள் இன்றும் முழுமை பெறவில்லை. நமது ஜீவாதார கோரிக்கையான இட ஒதுக்கீட்டை அதிகரித்தல், இட ஒதுக்கீட்டில் உள்ள குளறுபடிகளை சரி செய்தல், கட்டாய திருமண பதிவுச் சட்டத்தில் திருத்தம் போன்றவைகளை உடனே நிறைவேற்றக் கோரி முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அழுத்தம் கொடுக்கும் நமது போராட்டம் தொடரும், கோரிக்கைகள் வெல்லும்.