இப்போது உள்ள உலக நாடுகளில், அமெரிக்காவில் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், அதிபராக (President) நிர்வாகப் பதவியை வகிக்கிறார்.

இந்தியாவிலுள்ள அரசு அமைப்பு முறை, இங்கிலாந்தைப் பின்பற்றுவது. தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களும், மாநிலங்களவை உறுப்பினர் களும், மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களும் தலைவராக முதன்மை அமைச்சரைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

அமெரிக்காவிலுள்ள 50 மாகாணங்களுக்கும் 50 ஆளுநர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

ஆனால், இந்தியாவிலுள்ள 29 மாநிலங்களுக்கும், ஏழு ஒன்றியப் பகுதிகளுக்கும் முறையே ஆளுநர்களும் துணை நிலை ஆளுநர்களும் மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டு, இந்தியக் குடிஅரசுத் தலைவரால் அமர்த்தப்படுகிறார்கள்.

தமிழ்நாட்டு ஆளுநராக, பன்வாரிலால் புரோகித் அண்மையில் அமர்த்தப்பட்டார்.

ஏற்கெனவே 2016இல் தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைச்சரவை, செயலலிதா மறைவுக்குப் பிறகு, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவசர கதியில் அமைந்தது. இப்போது ஒரு பிரிவின் தலைவராக இருக்கிற எடப்பாடி கே. பழநிசாமி தலைமையில் அமைச்சரவை அமைந்துள்ளது. இந்த அமைச்சரவை போதிய பெரும் பான்மை இன்றித் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, பாரதிய சனதாக் கட்சி அரசு தமிழகத்தில் குடிஅரசுத் தலைவர் ஆட்சியை அறிவித்திட முயற்சிக்கிறது.

அதன் விளைவாகத்தான், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள், நேரிடையாகத் தமிழ்நாட்டு மாவட்டங் களின் நிர்வாக நிலைமை பற்றி அறிந்திடத் திட்டமிட்டு, 14-11-2017இல் கோவை மாவட்ட ஆட்சியர், கோவை மாவட்டக் காவல் துறைத் தலைவர், கோவை மாநகராட்சி ஆணையர் அடங்கிய மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை, தமிழக முதல மைச்சருடைய ஒப்புதல் இல்லாமல் அவரே நேரடியாக நடத்தியிருக்கிறார்.

இது தமிழக ஆளுநரின் அத்துமீறிய செயலாகும். எந்த மாநிலத்திலும், 1952க்குப்பிறகு உள்ள 65 ஆண்டுக் காலத் தில் எப்போதும் இப்படிப்பட்ட அத்துமீறல் நடந்தது இல்லை.

எப்படியாவது, திராவிடப் பண்பாட்டு அடையாளங் களுடன் விளங்கும் தமிழகத்தில், விரைவில் குடிஅரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி, இப்போதுள்ள ஆளுநரைக் கையாளாக வைத்துக் கொண்டு, பாரதிய சனதாக் கட்சி தமிழகத்தில் காலூன்றிட எல்லாம் செய்கிறது, மோடி அரசு.

தமிழின உணர்வும், திராவிடப் பண்பாட்டுக் காப்பு உணர் வும் உள்ள எல்லாக் கட்சியினரும் இந்தச் சூழ்ச்சியைப் புரிந்து கொண்டு, மோடியின் மோசடித் திட்டத்தை அம்பலப்படுத் துங்கள்.

Pin It