அறிமுகம்

தமிழகத்தில், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் நிகழ்ந்த விவசாயிகளின் தற்கொலை மற்றும் திடீர் மரணம் தொடர்பான பத்திரிகைச் செய்திகள் சமூக அக்கறையுடைய அனைவரையும் உலுக்கியது என்றால் மிகையில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த மரணம் நாளொன்றுக்கு பத்துபன்னிரண்டாக உயர்ந்து இரணடு மாதங்களில் 120ஐ கடந்துவிட்டது என்று பத்திரிகைகளும் காட்சி ஊடகங்களும் செய்தியாகவும் விவாதங்களாகவும் முன்வைத்தன.

’வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று கூறும் மரபில் வந்தவர்கள் இன்று விவசாயத்திற்கு தண்ணீர் இன்றி கருகிய பயிரைக்கண்டு தம் உயிரை மாய்த்துக்கொள்ளும் துயரநிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள். ஆனால், விவசாயிகளின் தற்கொலைக்கு, மரணத்திற்கு பருவமழை பொய்த்ததோ அல்லது காவிரிநீர் உட்பட உள்ள பாசன நீர் கிடைக்காமைய காரணமல்ல என்றும் விவசாயிகளின் தனிப்பட்ட குடும்பச்சிக்கல்கள் காரணத்தாலும் நோய்வாய்ப்பட்டும் இறந்துள்ளனர் என்று தமிழக அமைச்சர் ஒருவர்கூறுகிறார்.

farmer suicide

இந்தபின்னணியில் தான் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் இதில் அக்கறை கொண்ட இயற்கை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள், மனிதஉரிமை ஆர்வலர்கள், ஊடக செயற்பாட்டாளர்கள், பெண்ணுரிமையாளர்கள், மாணவர்கள் உள்ளடங்கிய 22 பேர்கொண்ட உண்மையறியும் குழுவொன்று விவசாயிகளின் மரணங்களில் உள்ள உண்மைக் காரணங்களை அறிய முன்வந்தது.

இந்தகுழு இந்த மரணங்களுக்கான பின்னணியை புரிந்துகொள்ள பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்துகுடும்பச் சூழலையும், விவசாயத்தொழில் தொடர்பான நெருக்கடிகளையும் அறிந்து கொள்வதென்றும், மேலும், இச்சூழலை எதிர்கொள்ள மத்திய மாநில அரசுகளும், விவசாய பெருமக்களும் என்னசெய்யலாம் என்பதைதெரிந்து கொள்வதற்கான ஒரு முயற்சியாகவும் மேற்கொள்ளப்பட்டது.

இக்குழுவில் ஒரு சிலர் சனவரி 8ம் தேதி தஞ்சையில் முழுநாள் சந்தித்து திட்டமிட்டு பிறகு அதைத்தொடர்ந்து இரண்டுநாட்கள் (சனவரி9 மற்றும் 10 தேதிகளில்) டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகபட்டிணம் ஆகிய மூன்று மாவட்டங்களில் மூன்றுகுழுக்களாக பிரிந்து ஏறக்குறைய ஆயிரத்து ஐநூறுமைல்களுக்கு மேல்பயணம் மேற்கொண்டு பாதிக்கப்பட்டமக்களில் 47 குடும்பங்களை மட்டுமே சந்திக்கமுடிந்தது.

ஒவ்வொரு குழுவிலும் நாம்கண்ட காட்சிகளையும் உரையாடல்களையும் காணொலி பதிவுகளாக்கியுள்ளோம். இந்த காணொலிப் பதிவுகளின் தொகுக்கப்பட்ட வடிவம் Tu No என்னும் You Tube ஊடகத்தில் விரைவில் காணலாம்.

மூன்று குழுக்களாக பிரிந்து செயல்பட்ட உ ண்மையறியும் குழுவின்அறிக்கைகள் தனித்தனியாக திரட்டப்பட்டு, ஓரு முழ அறிக்கையாக தொகுக்கப்பட்டதன் இறுதிவடிவமே இந்தஅறிக்கை.

இந்தஅறிக்கை தமிழக விவசாய மக்கள் சந்தித்துள்ள நெருக்கடிகளையும் அதற்கான சூழலையும் ஓரளவு புரிந்து கொள்வதற்கான தரவாக மட்டுமல்லாமல் விவசாய இயக்கங்களும், சமூக இயக்கங்களும், ஏன் அரசியல் இயக்கங்களும் இச்சூழலை மாற்றுவதற்கான ஊக்கத்தைப் பெறுவதற்கான கருவியாக இவ்வறிக்கை அமையும் என நம்புகிறோம்.

மத்திய மாநில அரசுகள் “விவசாயம் தமிழகத்தின், இந்தியாவின் முதுகெலும்பு” என்றும் ”இந்தியா கிராமங்களில் வாழ்கிறது” என்றும் உரைப்பது உண்மையானால் விவசாய பெருமக்களின் இன்றைய நெருக்கடிகளுக்கான காரணிகளை அறிந்து அதற்கேற்ற விவசாயக் கொள்கையை, சூழலியல் மற்றும் மாந்தநலன் சார்ந்த பொருளாதாரகொள்கையை கடைப்பிடிப்பதற்கு முன்வருமா என்றகேள்வி எழுகிறது. குறிப்பாக, தமிழகத்தின் காவிரிநதிநீர் மீதானஉரிமையை நிலைநாட்ட மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?

அரசுகள்முன்வராத சூழலில் இதில் அக்கறை கொண்ட அரசினை ஆட்சியில் அமர்த்த இந்தஅரசியல் கட்டமைப்பையும், சமூககட்டமைப்பையும் மாற்றவேண்டியதன் தேவையை சமூகஇயக்கங்களும் அரசியல் இயக்கங்களும் உணர்ந்து செயல்படுவதற்கான மற்றொரு செயலூக்கியாக இந்த அறிக்கை அமைந்தால் மகிழ்ச்சியே!

இவண்

உண்மையறியும்குழு.

தஞ்சாவூர் . 11.01.2016.

தமிழக உழவர்களின் தற்கொலை/அதிர்ச்சி மரணம் தொடர்பான உண்மை அறியும் குழுவின் அறிக்கை 

உண்மை அறியும் குழுவின் பதிவுகள்:

கடந்த 09.01.2017 மற்றும் 10.01.2017 தேதிகளில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உழவர்களின் தற்கொலை மற்றும் மரணம் தொடர்பான உண்மைத் தகவல்களைத் திரட்டுவதற்காக உண்மை அறியும் குழு தாளாண்மை இயக்கத்தின் திரு.திருநாவுக்கரசு அவர்களின் ஒருங்கிணைப்பில் பயணம் செய்தது. இந்தக் குழுவில் உழவர்கள், சூழலியலாளர்கள், இயற்கை வேளாண்மை வல்லுநர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர், மாணவர்கள். சமூகசெயல்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவர்கள் மூன்று குழுக்களாக பிரிந்து டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட உழவர்களின் வீடுகளுக்குச் சென்று மரணமடைந்தோரின் உறவினர்களைச் சந்தித்தனர்.

 • உண்மை அறியும் குழு சந்தித்த உழவர்களின் பட்டியல் தனியே இணைக்கப்பட்டுள்ளது.
 • அதிர்ச்சி மரணமடைந்த / தற்கொலை செய்துகொண்ட குடும்பங்களின் சமூக, பொருளாதார அடிப்படைகள் குறித்து அறிந்து கொள்வதற்காக, உண்மை அறியும் குழு வினாப்பட்டியல் ஒன்றைத் தயாரித்தது. வினாப்பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
 • மாண்டவர்களில் தற்கொலை செய்து கொண்டோர்………. அதிர்ச்சியால் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தவர்களாக உள்ளனர்.
 • மாண்டவர்களில் பெரும்பாலும் மூன்று ஏக்கருக்கும் குறைவான நிலத்தை சொந்தமாகவோ, அல்லது குத்தகைக்கோ எடுத்து விவசாயம் செய்பவர்களான குறு/சிறு உழவர்களாக உள்ளனர்.
 • மாண்டவர்களில் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர்.
 • மாண்டவர்களில் அனைவரும் மிகை வட்டிக் கடனை தனியாரிடமிருந்தும், மைக்ரோ நிதி நிறுவனங்களிடமும், கூட்டுறவு வங்கிகளிடமிருந்தும் பெற்றுள்ளனர். வட்டி விகிதம் 26%லிருந்து 120% வரை கடனாகப் பெற்றுள்ளனர். இதில் நகை அடமானக் கடனும் அடங்கும். ஒரு சிலர் மட்டுமே தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிடல் கடன் பெற்றுள்ளனர்.
 • தற்கொலை செய்து கொண்டவர்கள் அனைவரும் கருகிய பயிரை காப்பாற்ற இயலாத துயரத்தாலும், ஈடு செய்ய முடியாத கந்துவட்டி கடன் சுமையாலும் ஆழ்த்தப்பட்டுள்ளனர். வாழ்க்கையில் நம்பிக்கையற்ற, கையறு நிலையில், வாங்கிய கடனை திரும்பச் செலுத்த முடியாத அவமானத்தை தாங்க முடியாமல் மன உலைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இது ஒரு வகையில் தற்கொலைக்கு தூண்டும் காரணியாகக் கொள்ள வேண்டியுள்ளது.
 • உழவர்களின் தற்கொலைக்கு வேறு தனிப்பட்ட காரணங்களோ அல்லது குடும்பச் சூழலோ அல்ல என்பதை உண்மையறியும் குழுவின் விசாரணையில் கண்டறிய முடிந்தது.
 • அதே போல் மாரடைப்பால் இறந்தவர்கள் அனைவரும் மேற்படி காரணங்களால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் இறந்திருப்பார்கள் என்றே கருத வேண்டியிருக்கிறது. ஒரு சிலர் வயதின் மூப்பு காரணத்தால் இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தாலும், இதய நோயிற்கான எவ்வித பின்புலமும் இல்லாத பின்னணியில் இவர்களுக்கு ஏற்பட்ட மாரடைப்பு மன அழுத்தத்தால் ஏற்பட்டிருப்பதற்கான வாய்ப்பே அதிகம் என்று உண்மையறியும் குழு கருதுகிறது. (தீவிர மன அழுத்தம் மாரடைப்பிற்கு வழிவகுக்கலாம் என்னும் ஆய்வுக் குறிப்பை தரவுகளுடன் மெய்ப்பித்துள்ள இதய மருத்துவ நிபுணரும் உண்மையறியும் குழுவின் உறுப்பினரான மருத்துவர் பாரதி செல்வன் அவர்களின் ஆய்வு கவனத்தில் கொள்ள வேண்டியது. இதுபற்றி அவருடைய ஆய்வு குறிப்பு இந்த அறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது)
 • காவிரி நீர் வராததும், பருவ மழை பொய்த்து போனதும் உழவர்களின் வாழ்வையே புரட்டிப் போட்டுள்ளது. தொடக்கத்தில் வந்த சிறிதளவு நீரைக் கொண்டு நெல் நாற்று விட்டவர்கள், நடவும் செய்துவிட்டனர். தொடர்ந்து காவிரியில் நீர் வரத்து நின்றதும் பயிர்கள் கருகத் தொடங்கின.
 • ஆழ்துளைக் கிணறுகள் மூலம் சிறிதளவு பயிர்களையே காக்க முடிந்துள்ளது. டெல்டா பகுதிகளில் பல இடங்களில் 200 அடிக்கும் கீழே நிலத்தடி நீர் சென்றுவிட்டது. நிலத்தடி நீருக்கான ஆதாரமாகவும் காவிரி நீரே இருப்பதால் வந்த விளைவு எனலாம்.
 • இரண்டு ஏக்கருக்கு குறைந்த அளவு நிலம் வைத்திருந்தோர் கூட ஒரு லட்சத்திற்குக் குறையாத அளவில் கடன்பட்டுள்ளனர். 
 • காவிரி டெல்டா பகுதியின் பாசனத்திற்கு அடிப்படையான ஆற்று நீர் தொடர்ந்து கிடைக்காத்தே பயிர்கள் காய்ந்து போனதற்கான காரணம். காவிரி நீர் கடந்த காலங்களிலும் தேவையான அளவு கிடைக்கவில்லை என்றபோதும் இந்த ஆண்டு பருவ மழையும் போதுமான அளவு பெய்யாததால் பயிர்கள் கருகி விட்டன.
 • நெற் களஞ்சியம் என்று போற்றப்பட்ட தஞ்சை மண்டலம் மூன்று போக விளைச்சலைக் கண்டு முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ளது. இரண்டு போக விளைச்சல் பொய்த்தும் இருபது ஆண்டுகளாகிவிட்டது. விவசாய வரலாற்றில் ஒரு போகம் கூட விளைவிக்க இயலாத துயர நிலைக்கு தஞ்சை மண்டலம் ஆட்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
 • உழவர்களின் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum Support Price) என்பது தொடர்ந்து உழவர்களை வஞ்சிப்பதாகவே உள்ளது. பிற தொழில்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு இணையாக வேளாண் விளை பொருட்களுக்கு விலை நிர்ணயிப்பதில்லை. அதாவது நான்கில் ஒரு பங்கு அளவில் மட்டுமே உழவர்களின் விளை பொருட்களுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டது. நெற்பயிருக்கு சராசரியாக ஏற்படும் செலவு பற்றிய விரிவான கணக்கீட்டை பொறியாளரும் விவசாய ஆய்வாளருமான தோழர் திருநாவுக்கரசு கணித்துள்ளார் அவர்களின் அறிக்கை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
 • காவிரி நதி நீர் ஓட்டம் கடலுக்கு இயல்பாகச் செல்லாத காரணத்தால் கடல் நீர் நிலத்தில் புகுந்து வருகிறது. இதனால் நீர் உப்புச் சுவையாக மாறி அது வேளாண்மைக்கும் குடி நீருக்கும் பயனற்றதாக மாற்றியுள்ளது. இந்த நிலையில் ஆழ் குழாய் கிணறுகளை அமைத்து குடி நீர் வாணிகத்திற்கு அனுமதியளித்திருப்பது வியப்பாக உள்ளது. (காரைக்காலையொட்டி நாகப்பட்டிணம் மாவட்டத்தில் நான்கு குடி நீர் கம்பெனிகள் செயல்பட்டு வருகின்றன!).
 • நீரின்றி வேளாண்மை பொய்த்ததால் உழவர்கள் மட்டுமின்றி அவர்களை நம்பி வாழ்ந்த உழவுத் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கையும் இத்தோடு இணைந்ததால் உழவுக்கூலிகள் வேலையின்றித் தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
 • நீர் வரத்துக் கால்வாய்கள் முறையாகப் பராமரிக்கப்படாததால் வரும் சிறிதளவு நீரும் உழவர்களுக்குப் பயன்படவில்லை. உள்ளூர் நீர் ஆதாரங்களைப் பராமரிக்கும் பாசன சங்கங்கள் முழுமையாகச் செயல்படவில்லை.
 • பயிர்கள் கருகிய நிலையில் 100 நாள் வேலைத் திட்டம் ஓரளவுக்கு ஏழை எளிய மக்களுக்கு உதவியாக இருக்கிறது. 
 • ஆனால் வேலை செய்ததற்கான கூலி பல மாதங்களாக வங்கியில் செலுத்தப்படாமல் உள்ளது. இலவச அரிசி தற்கொலையை கொஞ்சம் தடுத்து வைத்திருப்பதாக மக்கள் சொன்னதை வேதனையுடன் பதிய வேண்டி உள்ளது.
 • மாநில அரசு அறிவித்துள்ள நிவாரணம் மத்திய அரசின் பேரிடர் நிவாரண வழிகாட்டுதலை அடிப்படையாக கொண்டதாக இருக்கிறது. உண்மையான இழப்பின் அளவை கணக்கில் கொள்ளவில்லை.
 • இந்த நிலை தொடர்ந்தால் விவசாயத்தை விட்டு வெளியேறுவதத் தவிர வேறு வழியில்லை என்பதைப் பல விவசாயிகள் வலியுறுத்தினர்.
 • வரைமுறையற்ற வகையில் செய்யப்பட்ட மணல் கொள்ளை டெல்டா பகுதியின் நிலத்தடி நீர் மட்டத்தை வெகு ஆழத்திற்குக் கொண்டு சென்றுவிட்டது.
 • நாகை மாவட்டம் அருள்மொழித் தேவன் ஆளத்தூர் அஞ்சல் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்னால் சோதனைக்காக இரண்டு ஆழ்துளை கிணறுகள் தமிழக அரசால் அமைக்கப்பட்ட போது, குடி நீருக்கு வசதியில்லாதிருக்கும் கிராமங்களுக்கு குடி நீர் வேண்டி வேல்மணி என்பவர் தீக்குளிக்க முயற்சித்ததால் மாவட்ட நிர்வாகம் குடி நீர் தட்டுப்பாடு ஏற்படும் போது சோதனைக் கிணற்றிலிருந்து குடி நீர் வினியோகிக்கப்படும் என்று கூறியது. ஆனால் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.
 • கட்டுப்படியாகாத விலை, நீர் ஆதாரமின்மை, நிலத்தடி நீர் இன்மை, பணமதிப்பிழப்பு போன்ற பன்முனைத் தாக்குதல்களால் நிலை குலைந்து கையறுநிலைக்கு உழவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
 • தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் என்பது சதவீதம் பேர் அங்கீகரிக்கபடாத குத்தகை விவசாயிகளாக உள்ளனர். திட்டமிடப்படாத சந்தை வேளாண்மையில் இந்த குத்தகை விவசாயிகளே அணைத்து தொழில் நெருக்கடிகளையும் சுமக்க வேண்டி உள்ளது. விதை, நடவு, உரம், முட்டுவலி செலவு, உழுபடை கருவிகளுக்கான செலவு, என முதலீட்டு பொறுப்பு குத்தகை விவசாயிகளை சேர்ந்தது. எனவே அங்கீகரிக்கபடாத குத்தகை விவசாயிகள் வங்கி கடன், அரசு மானியம், பயிர் காப்பீடு. பயிர் இழப்பீடு என்று எதையும் பெறமுடியாத நிலையில் உள்ளனர். தவிர இவர்கள் கட்ட வேண்டிய குத்தகை பங்கு நிரந்தரமானதாக வேலாண்நெருக்கடியை ஏற்காத ஒரு நிரந்தர சுரண்டலாக உள்ளது. இது அவர்கள் மீதான பல்முனை தாக்குதலாக இருக்கிறது. மாண்டுபோன சிறு குறு விவசாயிகளில் அங்கீகரிக்கப்படாத குத்தகை விவசாயிகளே அதிகம் பேர் என்பதும் நமது விசாரணையில் தெரிய வந்தது. 

உண்மையறியும் குழுவின் பரிந்துரைகள்

 • பருவ மழை பொய்த்த காரணத்தால் மாநிலத்தை வறட்சி மாநிலம் என்று அறிவித்தாலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீடு கள ஆய்வுகளின்படி இல்லை. டெல்டா மாவட்டங்களில் உள்ள நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ25000 இழப்பீடு வழங்க வேண்டும்.
 • பயிர் கருகியதாலும் கடன்சுமையிலிருந்து மீளமுடியாத காரணத்தாலும் கையறு நிலையில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளுக்கும் அதே நேரத்தில் அதிர்ச்சி மரணமடைந்த அனைத்து விவசாயிகள் குடும்பத்திற்கும் மத்திய மாநில அரசுகள் தலா ரூ25 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும்.
 • டெல்டா மாவட்டங்களின் உயிர் நாடியாகக் காவிரி நீரே இருக்கின்றது. எனவே, மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தையும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவையும் உடனடியாக அமைத்து உச்ச நீதி மன்றத் தீர்ப்பின்படி வாரம் தோறும் தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய நீரைப் பெறுவது உடனடித் தேவை.
 • விவசாயத்தையே நம்பி வாழும் விவசாயக் கூலிகளுக்கு அவர்கள் செய்த நூறு நாள் வேலைக்கான கூலி பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும். மேலும், வறட்சியால் பாதிக்கப்பட்ட கூலி விவசாயிகளுக்கு நூறு நாள் வேலை வாய்ப்பினை இரு நூறு நாட்களாக நீட்டிக்க வேண்டும்.
 • நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிக்கு அமர்த்தப்படுவோர் நீர் ஆதாரங்களை பராமரிக்கும் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும். மேலும், சிறு/குறு விவசாயிகளின் நிலங்களில் பணி செய்வதற்கும் 100 நாள் பணியாளர்களைப் பயன்படுத்தினால் நல்ல பயன் விளையும்.
 • பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு அரசே தலையிட்டு இழப்பீடு பெற்றுத் தரவேண்டும். உயிரிழந்த விவசாயிகள் பல்வேறு நிறுவனங்களில் பெற்றுள்ள அனைத்துக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படல் வேண்டும். உழவர்கள் வாங்கியுள்ள அனைத்துவகை கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டால் உயிரிழப்பு குறையும் வாய்ப்புள்ளது.
 • குத்தகை விவசாயிகளுக்கு குத்தகை ஒப்பந்தப் பத்திரம் முறைப்படி வழங்கி அவர்களுக்கு வங்கிக் கடன் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும். குத்தகை விவசாயிகளுக்கு சட்ட உரிமை வழங்குவதும் சட்டவிரோத நிலங்கள் மற்றும் உபரி நிலங்களை அவர்களுக்கு பிரித்து கொடுப்பதும் தஞ்சை தரணியை மேம்படுத்தும் இந்த உழைக்கும் மக்களின் நிலையை நிரந்தரமாக மேம்படுத்த அவர்களுக்கு ஆதரவாக நிலஉரிமையை உறுதி செய்ய உடனடி சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். டெல்டா மண்டலத்தின் அனைத்து கோவில்களின் பராமரிப்புச் செலவுகளை அரசே பொறுப்பேற்று டெல்டா மண்டலத்தின் அனைத்து மடங்களின் நிலங்களையும் பாரபட்சம் இன்றி குத்தகை விவசாயிகளுக்கு பிரித்து வழங்க வேண்டும்
 • பாசன சபைகளில் குத்தகை விவசாயிகளுக்கும், விவசாயக் கூலிகளுக்கும் பங்கு பெறும் உரிமை வழங்கப்படல் வேண்டும். பாசன சபைகள் மறு சீரமைப்பு செய்யப்பட்டு நீர் மேலாண்மை செய்வதற்கான முழுமையான அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.
 • மத்திய அரசு ஊழியர்களின் மாதச் சம்பளம் விலைவாசி உயர்வுக்கு ஏற்ற வகையில் அவ்வப்போது உயர்த்துவது போன்று விவசாயப் பெருமக்களின் விளைப்பொருட்களுக்கான குறைந்தப் பட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்பட வேண்டும்.
 • பகுதிச் சூழலிற்கேற்ப வானிலை மையங்களும் வேளாண் மையங்களும் தேவையான ஆலோசனைகளை வழங்கி நீண்ட கால நோக்கில் விவசாயிகள் நலம் பெற வழிவகை செய்யப்படல் வேண்டும்.
 • குடி நீருக்கும், விவசாயத்திற்கும் தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் வாய்ப்பு இருந்தால் சமூகக் கிணறுகளை அல்லது ஆழ்துளைக் கிணறுகளை அரசு செலவில் அமைக்க வேண்டும்.
 • டெல்டா பகுதிகளில் நிலத்தடி நீரை உறிஞ்சிகுடி நீர் விற்பனை செய்யும் வணிக நிறுவனங்களின் உரிமங்கள் இரத்து செய்யப்பட வேண்டும்.
 • காவிரி ஆற்றில் இயங்கி வரும் அனைத்து மணல் குவாரிகளையும் தடைசெய்து நிலத்தடி நீரைக் காக்க வேண்டும்.
 • வறட்சியை தாங்கி நிற்கும் மண்ணிற்கேற்ற மாற்றுப் பயிர்கள் சாகுபடி செய்யத் தேவையான விதை, இடுபொருள், தொழில்நுட்பம் ஆகியவற்றை வழங்க அரசு ஆவண செய்ய வேண்டும்.
 • வறட்சிக் காலங்களில் கால்நடைகளுக்குத் தேவையான தீவனமும் தண்ணீரும் வழங்க மாநில அரசு வழி வகை செய்ய வேண்டும்.
 • மண் வளத்தையும், நீர் வளத்தையும், சுற்றுச் சூழலையும் பாதிக்கின்ற இரசாயன விவசாயத்தை படிப்படியாகத் தவிர்த்து நாட்டின் இயற்கைச் சூழலுக்கு ஏற்ற, முட்டுவழிச் செலவையும், நீர்த் தேவையையும் குறைக்கின்ற இயற்கை விவசாயத்தை அரசின் கொள்கையாக அறிவிக்க வேண்டும்.
 • மண் வளத்தையும், நீர் வளத்தையும், சுற்றுச் சூழலையும் *பாதிக்கின்ற வேதியியல் வேளாண்மையைப் படிப்படியாகக் குறைத்து இயற்கைச் சூழலுக்கு ஏற்ற, இயற்கை வேளாண்மையை நடைமுறைக்குக் கொண்டுவர அரசு ஆவண செய்யவேண்டும். பட்ஜெட்டில் அதிக நிதி நாட்டு வேளாண்மைக்கு ஒதுக்கப்பட வேண்டும். தீவிர முதலீட்டு தேவை கொண்ட நவீன சாகுபடியை மாற்றி செலவில்லா வேளாண்முறையை நோக்கி மாற்றி அமைக்க வேண்டும்.
 • விவசாயிகளின் வாழ்க்கை நிலையை மேம்படுத்த பறவைகள் கால்நடைகள் வளர்ப்பு திட்டம் ஏற்படுத்தப்பட வேண்டும். இலவச நாட்டின கால்நடைகளை வழங்கப்பட்டது தொடர வேண்டும். ஊக்கப்படுத்தப்பட வேண்டும். கிராமந்தோறும் சமுதாய மேய்ச்சல் காடுகளை அமைக்க வேண்டும்.
 • காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்பகுதியாக அறிவித்து கடைமடை விவசாயத்திற்கான தடையற்ற பாசனம், நீர் கட்டுமானங்கள், இயற்கைச் சூழலை மாசுப்படுத்தாத விவசாயம், உற்பத்திப் பொருட்களின் விலைகளை உழவர்கள் தீர்மானிக்கும் உரிமை, எல்லா பருவத்திலும் உழவுக் கூலிகளுக்கு உறுதி செய்யப்பட்ட கூலி ஆகியவை நிறைவேற தொடர் நடவடிக்கை தேவை.
 • இயற்கை விவசாயத்தை மேற்கொள்வதற்கான ஊக்கங்கள், மற்றும் விவசாயத் தொழிலுக்கான சிறப்புச் சலுகைகள் எனஅனைத்து அதிகாரங்களும் கிராம சபைகளிடம் இருத்தல் வேண்டும். விவசாய தொழிற்துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட வேண்டும். 
 • வரும் ஜூன் 12, 2017 அன்று மேட்டுர் அணை திறப்பதற்கான சூழலை உருவாக்கும் வகையில் காவிரி நீரைப் பெறுவதற்கான தொடர் நடவடிக்கைகள் தொய்வின்றித் தொடரவேண்டும். உழவர்களும், உழவர்கள் சார்ந்து இயங்கும் அமைப்புகளும் தொடர் போராட்டங்களின் மூலம் காவிரியில் நீர் பெறுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அடையாளப் போராட்டங்களை மட்டுமே மேற்கொள்வது எவ்வகையிலும் இறுதித் தீர்வுக்கு இட்டுச் செல்லாது.
 • அவ்வாறு காவிரி நீரைப் பெறவில்லையெனில் வரும் ஆண்டுகளில் உழவர்களின் தற்கொலை, அதிர்ச்சி மரணங்கள் தொடர்வதைத் தடுக்க முடியாது.
 • மத்திய அரசு தொலைநோக்கு பார்வையில் மேற்கு தொடர்ச்சி மழையின் மீது அமைக்கப்பட்ட பச்சை பாலைவனம் எனப்படும் எஸ்டேட்டுகளை அரசுடமையாக்கி அவற்றை மீண்டும் பசுமை மாறா காடுகளாக அறிவித்து இந்தியாவில் மழை பொழிவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உண்மை அறியும் குழு அறிக்கையின்இணைப்புகள்.

இணைப்பு – 1.

                   
இறந்தவர் பெயர் வயது சமூகம் மாவட்டம் ஊர் இறப்பு நிலம் சொந்தம் (Acres) நிலம் குத்தகை (Acres) கடன் தொடர்பு
விஜய குமார் 51 ஆ.தி. திருவாரூர் வெங்காந்தான் குசி தற்கொலை 0.5 1.5 350000 9787778729
டி.அசோகன் 56 அம்பலக்காரர் திருவாரூர் புதுக்குடி மாரடைப்பு 6   445000 9787388603
வ.கண்ணன் 42 இ.நாடார் நாகை திருப்புகழூர் மாரடைப்பு   6 195000 8489566941
கலிய பெருமாள் 67 அகமுடைத் தேவர் நாகை ஓர்குடி மாரடைப்பு   2 120000 8098562549
வீரமணி 30 அருந்ததியர் நாகை கீழ்வேலூர் மாரடைப்பு 1   120000 8760837980
சரோஜா 69 படையாச்சி நாகை கடம்பர வாழ்க்கை மாரடைப்பு 2   84000 9787741480
திருமாவளவன் 48 சைவப் பிள்ளை நாகை போலகம் மாரடைப்பு 11   85000 9942692720
வடமலை 85 படையாச்சி திருவாரூர் புத்தகளூர் மாரடைப்பு 3.5   125000 9345808198
நடராஜ கோணார் 75 கோணார் திருவாரூர் திருக்களர் மாரடைப்பு 2 3 160000 9865788247
உத்திராபதி 75 பள்ளர் திருவாரூர் பாண்டுகுடி மாரடைப்பு   4.5 120000  
அழகேசன் 36 ஆ.தி. திருவாரூர் ஆதிச்சபுரம் மாரடைப்பு   2 50000  
அ,ராமசாமி 68 தேவர் தஞ்சாவூர் ஆவுடை நாச்சியார் புரம் மாரடைப்பு 5   700000 9047549640
கோவிந்தராஜ் 67 மூப்பனார் அரியலூர் விழுப்பங்குறிச்சி மாரடைப்பு 1   100000 9751818071
தங்கையன் 55 மூப்பனார் அரியலூர் ஓட்டக்கோவில் மாரடைப்பு 3   180000  
மாசிலாமணி 50 அம்பலக்காரர் புதுக்கோட்டை பட்டுக்கோட்டை தற்கொலை   4 200000  
பொன்னுசாமி 67 பிள்ளை பட்டுக்கோட்டை ஆலத்தூர் மாரடைப்பு   3 150000  
கோவிந்தன் 83   அரியலூர் விழுப்பங்குறிச்சி மாரடைப்பு 2,5   100000  
கண்ணுச்சாமி 65 கள்ளர் தஞ்சாவூர் அத்திவெட்டி மாரடைப்பு 2   130000  
முருகானந்தம் 40 பள்ளர் தஞ்சாவூர் ஆலக்குடி மாரடைப்பு   1 200000  
ராமய்யா 50   அரியலூர் சேனாதிபதி மாரடைப்பு 3   150000  
அரவிந்தன் 24 கள்ளர் தஞ்சாவூர் குடிமாத்தூர் தற்கொலை   6.5 350000 9443763803

 

இணைப்பு – 2.

விவசாயிகள் மரணம் பற்றிய மருத்துவ ஆய்வு - மன அதிர்ச்சி மாரடைப்பும், தமிழக விவசாயிகளின் திடீர் மரணமும் ஓர் மருத்துவ அறிக்கை.

தமிழ்நாட்டில், சமீபத்தில் பெரும் எண்ணிக்கையிலான ஏழை விவசாயிகளின் உயிரிழப்புக்கு, பயிர்கள் கருகி வேளாண்மை பொய்த்துப்பொனதால் ஏற்பட்ட மன அதிர்ச்சியால் தூண்டப்பட்ட மாரடைப்புதான் காரணமா?

ஆம்.பெரும்பாலும் அதுதான் காரணம். 

திடீர் மரணங்கள் பெரும்பாலும் மாரடைப்பினாலேயே நிகழ்கின்றன:

தற்போதைய விவசாயிகளின் மரணங்கள் திடீர் மரணங்களே. திடீர் மரணம்(Sudden Death) என்பதன் பொருள், இறப்பதற்கு சற்றுமுன் நல்ல உடல் நிலையில் இருந்த ஒருவர் நோயுற்று ஒரு மணி நேரத்துக்குள் உயிரிழப்பதாகும்.

அறிவியல் அடிப்படையிலான புள்ளிவிவரங்களின்படி நூற்றுக்கு 88 திடீர் மரணங்கள் இதய நோய்களால்(Sudden Cardiac Death) ஏற்படுகின்றன. இவர்களில் நூற்றுக்கு 80 பேர் மாரடைப்பால் இறக்கின்றனர். 

மன உளைச்சல் அல்லது அதிர்ச்சியால் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படமுடியுமா?

இயற்கை பேரிடர்கள், தொழிற்சாலை பெருவிபத்துகள், பயங்கரவாதத் தாக்குதல்கள், விளையாட்டுப் பந்தயங்கள் போன்ற, உணர்ச்சிமய அழுத்தங்களை உண்டாக்கக்கூடிய, நிகழ்வுகளின்போது மாரடைப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதை ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

எ-கா: 1994ம் ஆண்டு லாஸ் ஏஞ்செல்ஸ் பகுதியில் நிகழ்ந்த நார்த்ரிட்ஜ் பூகம்பத்தின்போது, அது நடந்த பிறகு முதல் வாரத்தில், மாரடைப்பு நோயாளிகளின் எண்ணிக்கை, பூகம்பத்திற்கு முந்தைய வாரத்தைவிட 35% அதிகரித்தது. மாரடைப்பினால் திடீர் உயிரிழப்பு, பூகம்பத்துக்கு முந்தைய வாரத்தில் ஒரு நாளில் 4.6. பூகம்பத்தன்று இது 24 ஆகும்.

1991ல் நடந்த வளைகுடாப் போரின்போதும் மாரடைப்பு நோயாளிகளின் எண்ணிக்கையும், திடீர் உயிரிழப்புகளும் அதிகரித்தது. 

farmer sad

மாரடைப்பு ஏற்படுவது எப்படி?

இதயத் தசைக்கு இரத்தம் கொண்டுசெல்லும் இதயத் தமனியின் சில குறிப்பிட்ட பகுதிகளில், குழாயின் உட்புறத்தில் கொலெஸ்ட்ரால் படிந்து, தடிப்பாகி, தடிப்பின் அளவு கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்து, அக்குழாயின் உள் அளவு குறையும். அக்குறுகிய பகுதியின், தடிப்பில் திடீரென்று தெறிப்பு ஏற்பட்டால், திரவமாகச் செல்லும் இரத்தம்,அத்தடிப்பின்மீது கட்டியாக உறைந்து இரத்தக்குழாயை முழுமையாக அடைத்துவிடும். அடைப்புப் பகுதியைத்தாண்டி இரத்தம் செல்லமுடியாது. எனவே அதற்கு முன்னால், அடைபட்ட இதயத் தமனியிடமிருந்து இரத்தம் பெற்ற இதயத்தசைப்பகுதிக்கு இனி இரத்தமும், இரத்தம் சுமந்து செல்லும் உயிர்வளி(oxygen),குளுகோஸ்,லேக்டேட் போன்ற எரிபொருட்களும் கிடைக்காது. அப்பகுதியின் இதயத் திசு அழிந்து உயிரிழப்பை ஏற்படுத்தும். 

மன உளைச்சல் மற்றும் அதிர்ச்சி எப்படி மாரடைப்புக்குக் காரணம் ஆகும்?

மன அதிர்ச்சி, மூளை மற்றும் அனிச்சை நரம்பு மண்டலத்தை தூண்டுவதன்மூலமும், அட்ரீனல் சுரப்பியைத் தூண்டி நார்-அட்ரீனலின் என்ற ஹார்மோனை அதிக அளவில் சுரக்கச்செய்வதன் மூலமும்,

1.இதயத் துடிப்பு வேகத்தை அதிகரிக்கிறது

2.இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது.

3.தமனிகளின் சுருங்கும் தன்மையை அதிகரிக்கிறது

4.இரத்தம் உறைவதை ஊக்குவிக்கும் தட்டை அணுக்களைத் தூண்டுகிறது.

5.தாறுமாறான இதயத் துடிப்பைத் தூண்டுகிறது.

இம்மாற்றங்கள் இதயத் தசைக்கான ஆக்சிஜன் தேவையை அதிகரித்தும், இதயத்தமனிக் குறுக்கங்களின் கொலெஸ்ட்ரால் தடிப்புகளின் உட்புறத்தில் தெறிப்புகளை ஏற்படுத்தி, அவற்றின் மீது இரத்தத்தைக் கட்டியாக உறையச் செய்தும், மாரடைப்பை உண்டாக்கக் கூடும் என்று இதயவியல் சிறப்பு பாட நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறந்துபோன விவசாயிகளுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு சிறிது நேரத்திலேயே உயிர் பிரிந்திருக்கிறது.இப்படிப்பட்ட உயிரிழப்பு பெரும்பாலும் மாரடைப்பு நோயால்தான் ஏற்படமுடியும். மிக மிக அரிதாகவே வேறு நோய்களால் இப்படிப்பட்ட உயிரிழப்பு ஏற்படமுடியும்.

இவர்களில் பெரும்பாலோர் தங்கள் வயலில், கருகிப்போன நெற்பயிரைப் பார்வையிட்டுக்கொண்டிருந்த போதே, அங்கேயே மயங்கி விழுந்து இறந்திருக்கிறார்கள்.

எனவே, காவிரி ஆற்று நீரும் வராமல், மழையும் பொய்த்துப்போக ஓரளவு வளர்ந்த நெற்பயிர்கள் கருகிப்போக, இனி அப்பயிரைக் காப்பாற்றும் வாய்ப்பே இல்லை என்கிற ஏமாற்றம், மனதை வருத்தியதாலும், அநியாய வட்டிக்கு தனியாரிடம் வாங்கிய கடனைத் திருப்பச் செலுத்த முடியாதே என்கிற அவமானத்தாலும் ஏற்பட்ட மன அதிர்ச்சியால் ஏற்பட்ட மாரடைப்பே, சமீபத்தில் திடீரென்று இறந்துபோன விவசாயிகளில் பெரும்பாலோரின் மரணத்திற்குக் காரணம்.

தரவுகள்:

1.HARRISON’S PRINCIP[LES OF INTERNAL MEDICINE,

16th Edition,Volume II, Page 1618.

2.BRAUNWALD’S HEART DISEASE(A TEXTBOOK OF CARDIOVASCULAR MEDICINE), TENTH EDITION,VOLUME 2,Pages 1876, 77, 78.

மருத்துவர் இரா.பாரதிச் செல்வன் M.D., D.M(Cardiology),

இதயவியல் மருத்துவர்,

பாரதி இதய மருத்துவமனை,

36, மதுக்கூர் சாலை,

மன்னார்குடி. 614001.

பேச 9443585675.

மின்னஞ்சல் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். 

இணைப்பு . 3

விவசாயத்திற்கு ஆகும் செலவு ஒரு நேரடி மதிப்பீடும் அரசின் கட்டுபடியாகாத ஆதார விளையும்.

   
ஒரு ஏக்கர் சாகுபடி செய்யஆகும் ஆட்செலவு 19908
   

ரசாயன உரம்

7250
   
பூச்சிக்கொல்லி /களைக்கொல்லி செலவுகள் 3370
   
   
மூலதன இடுகை,கட்டுமானச் செலவுகள் 59292
   
ஒட்டு மொத்த செலவுகள் 89820
   
   
விளையும் நெல் ஏக்கருக்கு 1800 கிலோ  
   
ஒரு கிலோ நெல்லின் அடக்கவிலை 49.90
   
விற்பனை விலை @120% ஒரு கிலோ 59.88
   
ஒருகுவிண்டால்நெல்லின் விற்பனை விலை 5988.00
   

...--------------------------------------------------------------------------------------------

              0
நடவு செய்த 15 ஆவது நாள்       0
மானோகுரோட்டொபாஸ் 1/4 லிட்டர் 0.25 600 150
கார்பெண்டிசம் 1/4 கிலோ   0.25 500 125
              0
              0
              0
கார்போ ஹைட்ரோ குளோரைடு 1/4 லிட்டர் 0.25 1120 280
              0
இண்டோபில் M 45 1/4 கிலோ   0.25 1080 270
              0
களைக்கொல்லி-நடவு செய்த 3-5 ஆவது நாளில் 0
ரிவிட் ஏக்கருக்கு 1/2 லிட்டர்   0.5 950 475
              0
15-20 ஆம் நாள் நாமினிகோல்ட் 100மிலி 0.1 10000 1000
  &ரைட் ஸ்டார்   1/2 லி 0.5 1700 850
               
              3370
               
 
நெல் வயல் செலவுகள்        
உழவு செலவு 2 சால் டிராக்டர்மூலம் 2 1250 2500  
மேடுபள்ளம் சமன் செய்ய 2 ஆட்கள் 2 363 726  
உரமிட ஆட்கூலி 4 363 1452  
அடி உரம்,மூன்று மேலுரங்கள்        
நாற்றுப்பறி ஒப்பந்தக்கூலி 1 2000 2000  
தேநீர் பலகாரச் செலவு 8 13 104  
நடவு 17 பெண்கள் 17 150 2550  
தேநீர் பலகாரச் செலவு 17 13 221  
பூச்சிக்கொல்லியிட ஆட்செலவு 2 363 726  
களைக்கொல்லியிட ஆட்செலவு 2 363 726  
அறுவடை 15 ஆட்கள் ஒருவருக்கு 7 மரக்கால் நெல்     0  
வீதம்315கிலோ ரூ 15 /கிலோ 315 15 4725  
மூட்டை பிடித்து சந்தைக்கு கொண்டு செல்ல 2 363 726  
வண்டி கூலி இரண்டு வண்டிகளுக்கு 2 250 500  
மொத்த சாகுபடிசெலவு     19908.0  
மொத்தம் தேவைப்படும் முதலீடு ரூ.350,000/=      
ஏக்கருக்கு வீதப்படி வரும் செலவு ரூ35,000/=      
ரூ.35,000/=க்குஅரையாண்டு வட்டி(ஒரு போக சாகுபடிக்கு) 35000 15% 2625
பராமரிப்பு செலவு 1 5000 5000
தேய்மானம¢ (ஒரு போக சாகுபடி) 35000 1167 1167
முழுத்தேய்மானம் ஆக 15 வருடங்கள் எனக்கொள்க)      
       
நிலத்தில் செய்யபட்டுள்ள முதலீடு      
நிலத்தின் விலை ஏக்கர் ரூ.500,000/=      
முதலீட்டிற்கான ஆண்டு வருமானம் @15% 75000    
ஒரு போக சாகுபடிக்கு கிடைக்கவேண்டிய தொகை 75000 0.5 37500
       
இதர செலவுகள்      
உழவு கருவிகள் தேய்மானம்/புதுப்பித்தல் 1 1000 1000
ருசக்கர வாகனத்திற்கு பெற்றொல் செலவு நாள்      
ஒன்றுக்கு ரூ60/= வீதம் 100 நாட்களுக்கு 100 60 6000
வீட்டிற்கு பராமரிப்பு செலவு/புதுப்பிக்கும் செலவு 1 5000 5000
(ஆண்டுக்கு ரூ.10,00/=வீதம்)      
இரு சக¢கர வாகனத்தின் தேய்மானம் 1 1000 1000
    ரூ 59292
       
 
தற்போதைய குறைந்தபட்ச ஆதாரவிலை ரூ 1450/ ஆனால் 
சந்தையில் கிடைப்பதோ ரூ.850-900 தான். சரியான விலையில்
கால் பங்குகூட இல்லை.
 
நெல்லுக்கு தரப்பட்டுள்ள அதே முறையில் கரும்புப்பயிருக்கு
 டன் ரூ5250/= விலையாக்க் கிடைக்கவெண்டும்.ஆனால் அறிவி-
க்கப் பட்டுள்ள விலையோ டன் ரூ 2850 தான்.
 
விவசாய விலைபொருட்களின் விலையை குறைத்து வைக்க
வும்,விவசாய இடுபொருட்களுக்கான மானியம்,இலவச
மின்சாரம் ஆகியவைகளை நிறுத்தவும் உலகவங்கியின்
தொடர்ந்த அழுத்தம் உள்ளது.
 
இந்திய துணைக்கண்டம் வல்லாதிக்க நாடுகளின் குறைந்த
விலைக் கொள்முதல் தளமாக உள்ளது. அதே நேரம்
விவசாயிகள் தங்கள் முதலிழந்து கடனாளி ஆகிறார்கள்.
விவசாயம் செய்யவும், ஆழ்துளைக்கிணறு, டிராக்டர்,சோலார்
பம்புகள்,சாண் எரிவாயுக் கலன்கள் போன்ற அனைத்து
கருவிகளுக்கும் அரசாங்க கடனை எதிர்நோக்கவேண்டியுள்ளது.
 
கிராமப்புற விவசாய மற்றும் ஏனைய சிறுவணிக,சிறுதொழில்
வளர்ச்சிப்போக்கு அரசால் தீர்மானிக்கப்படுகின்றது.
விவசாயிகள் பயிர் செய்து அரசு/மொத்தவணிகர்கள் தீர்மானிக்
கும் விலைக்கு கொடுக்கும் ஒரு அடிமை எந்திரமாக ஆனார்கள்.
அரசுக்கடனும்,தனியார்களிடம் படும்கந்துவட்டிகடன்கள்,படிப்புக்காக
வாங்கிய கல்விகடன்,டிராக்டர்க்கடன் எல்லாம் விவசாயிகளை
நெருக்குகின்றன. இது அவர்களுக்கு தற்கொலை என்னத்தை விதைக்கிறது.
 

இணைப்பு – 4

காவிரி நதிநீர் உரிமை.

சிந்துநதியின் நீரை பாகிஸ்தானிடன் பகிர்ந்து கொள்ள இந்தியஅரசு ஒப்பந்தம் செய்துள்ளது. கங்கைநீரை பங்களாதேசத்துடன் பகிர்ந்துகொள்ள ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் சர்வதேசசட்டம் / நடைமுறை அடிப்படையிலானது. மீறஇயலாத ஒன்று. இதில் உள்ள அடிப்படை நியாயம் என்னவென்றால் ஒருநதி பலநாடுகளின் வழியே ஓடும்போது எல்லாநாடுகளுக்கும் அந்தநதி நீரில்உரிமை உண்டு. நதியின் கடைமடைப்பகுதிக்கும் இந்தஉரிமைஉண்டு.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, முல்லைப்பெரியாறு, காவிரி, பாலாறு நதிநீர்களின்மீது கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநில அரசுகள் நதிநீர்முழுதும் அவர்களுக்கே சொந்தம் என்ற மனநிலையில் செயல்படுகின்றன. நாம் காவிரிச்சிக்கலை இந்திய அரசியல்அமைப்புக்குள் தீர்க்கவேண்டியுள்ளது..

காவிரி நதிநீர்ச்சிக்கல் 1924ல் தொடங்கி 92 ஆண்டுகளாகத் தொடர்கின்றது.  மாநிலங்களுக்கு இடையேபாயும் பன்மாநிலநதிகளின்நீர்ப்பங்கீட்டு வழக்குச்சட்டம் 1956—ன் படிநடுவர்மன்றங்களை அமைத்து நர்மதா, கிருஷ்ணா நதிப்பிரச்சினைகளைக் கையாள மேலாண்மைவாரியம் அமைத்து தீர்த்துவைத்துள்ளது. ஆனால் காவிரி நதிநீர்சிக்கலுக்கான நடுவர்மன்றம் அமைப்பதை 1970 இருந்து 1990 வரை இந்தியஅரசு காலதாமதம் செய்தது. காலம்தாழ்த்தி அமைக்கப்பட்ட நடுவர்மன்றமும் உச்சநீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பிறகுதான் என்பதும் கவனிக்கத்தக்கது. மேலும் 17 ஆண்டுகளுக்குப் பிறகு 05.02.2007ல் நடுவர்மன்றம் தனது இறுதித்தீர்ப்பை அளித்தது . ஆனால் இந்தியஅரசிதழில் உடன்வெளியிடப்படவில்லை.

தமிழகஅரசும், விவசாயிகளும் நடத்திய போராட்டங்களின் பின்னர் சுமார் 6 ஆண்டுகள்கழிந்தபின்னர் 19.02.2013 அன்றேநடுவர் மன்றத்தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது. நடுவர்மன்றத்தீர்வை நடைமுறைப்படுத்த தேவையான காவிரிமேலாண்மைவாரியம், காவிரிஒழுங்குமுறைக்குழு ஆகியபொறியமைவுகள் அமைக்கப்பட்டு உடன்நிகழ்வாக அரசிதழில் வெளியிட்டிருக்கவேண்டும். ஆனால் இந்தியஅரசு இதைச்செய்யவில்லை. மேற்கண்ட மேலாண்மைவாரியம், ஒழுங்காற்றுக்குழு என்ற்அமைப்புகள் இல்லாமல் நடுவர்மன்றத்தீர்ப்பு என்பது செயல்படுத்தமுடியாத வெற்றுக்காகிதமாக நீடிக்கின்றது. உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு தொடுத்தவழக்குகள், உச்சநீதிமன்றம் அமைத்த பல குழுக்களால் தமிழகத்திற்கு கிடைக்கவேண்டிய 192 டிஎம்சி கிடைக்கவேயில்லை. உச்சநீதிமன்றத்தீர்ப்பை கர்நாடகம் புறக்கணிக்கும்போக்கும் எழுந்தது. இந்தியஅரசு நான்கு நாட்களுக்குள் காவிரிமேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று தீர்ப்பளித்தபோது பிரதமர்மோடி காவிரிமேலாண்மை வாரியம் தற்போது அமைக்கமுடியாது. பாராளுமன்றத் தீர்மானத்தீர்மானத்திற்கு பின்னர்தான் அமைக்க முடியும் என்று அறிவித்தார். 1924 முதல் 2016 வரைசுமார் 92 ஆண்டுகள் நடந்த நிகழ்வுகள் எல்லாம் சட்டப்படி நடந்தவையே.

சுமார் ஒருநூற்றாண்டு காலமாக காவிரி நதிநீர்ச்சிக்கலை தீர்க்காமல் தமிழகமக்கள் அழிவின்விளிம்புக்கு வந்துள்ளார்கள். காவிரிமேலாண்மை வாரியம் எப்போது அமைக்கப்படும் என்ற உறுதியான செய்தியும் பிரதமர் மோடியிடமிருந்து வரவில்லை. வடகிழக்கு பருவமழையும் பொய்த்துவிட்டது. விவசாயத்திற்கான நீர்மட்டுமல்ல. மக்களின் குடிநீரும் வறண்டு வருகின்றது. பலமாவட்டங்களிலும் மக்கள் நெஞ்சுவெடித்துசாகிறார்கள். மக்களிடம் இனிவிவசாயத்தை தொடரமுடியுமா என்ற நம்பிக்கை இழப்பு உள்ளது

வரும் ஜூன்12, 2017 வழக்கப்படி மேட்டூர் அணையைத் திறக்க நடுவர்மன்ற தீர்ப்பை செயல்படுத்த இந்தியஅரசு உடன்காவிரி மேலாண்மைவாரியம் அமைக்கவேண்டும். பாரதப்பிரதமர் 7.5 கோடி தமிழகமக்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தை உணர்ந்து உடன் செயல்பட வேண்டும்.

..-------------------------------------------------------------------------------------------------

இணைப்பு – 5

மீத்தேன் எடுப்பு என்பது தமிழகத்தின் வேளாண்மையை அழிப்பதே. விவசாயிகளை அழிப்பதே..

  பாலாற்றின் தென்கரை முதல் இராமநாதபுரம் வரையுள்ள பெரு நிலப்பரப்பில் சுமார் 500 அடி முதல் 1650 அடி ஆழத்தில் நிலக்கரிப் படிவங்கள் இருப்பதாக கண்டுள்ளார்கள். காவிரிப்படுகையின் மன்னர்குடிப்பகுதியில் 691 சதுர கி.மீ. பரப்பில் மீத்தேன் எடுக்க இந்திய அரசு கிரேட் ஈஸ்டெர்ன் எனெர்ஜி கார்பொரேசன் என்ற கம்பெனியுடன் ஒப்பந்தம் செய்தது.பெற்றோலியம் எண்ணெய் எடுக்கும் பணியில் இருந்த ஓஎன்ஜி.சி கம்பெனியும் மீத்தேனுக்கான ஆழ்துளைக்கிணறு அமைக்கும் வேலையில் இறங்கியது.

ஆழ்துளையிட்டு இருக்கும் உப்பு நீரை வெளியேற்றுவார்கள் . இந்த உப்பு நீர் நிலத்தை சாகுபடிக்கு உதவாத நிலமாக்கும். பின் கிடையாக துளையிட்டு 600க்கும் மேற்பட்ட வேதிப்பொருட்களை மிகை அழுத்த்த்தில் செலுத்தி வெடிக்கவைக்கும் horizontal fracturing or fracking என்று அழைக்கப்படும் ஆபத்தான முறை. இந்த கடினமான நிலக்கரி மற்றும் வண்டல் பாறைகளை நொறுக்கும். நிலத்தடியில் மேல் கீழாக வெடிப்புகளை உருவாக்கி நிலத்தடியில் இயற்கையாக இருந்த நீரிருப்புகளை நாசப்படுத்தும். நன்னீர் உப்புநீர் நீர் இருப்புகள் கலக்கும். காவிரிப்படுகையில் எண்ணெய்கம்பெனிகள் வேலை செய்த இடங்களில் தண்ணீர் குடிக்கமுடியாத ஒன்றாக ஆகியுள்ளது. வாழும் நிலப்பரப்பில் நீரையும், நிலத்தையும் பயனற்றதாக ஆக்கினால் மக்கள் அங்கு எப்படி வாழ்வது ? கோடிக்கணக்கான மக்கள், பல கோடி கால்நடைகள், பறவைகள், மரங்கள்,செடி கொடி வகைகள்,பல்வகை உயிரினங்களின் தாய்மடியாக இருந்த நிலத்தில் நெருப்பை அள்ளிக் கொட்ட இந்திய அரசு கம்பெனிகளை இறக்குகின்றது.

புவிவெப்பமயமாவதைத் தடுக்க உலகநாடுகளுடன் இந்தியாவின் வாக்குறுதி என்ன ஆவது ?

190 உலகநாடுகள் புவிவெப்பமாதலின் பிரதானமான காரணமான நிலத்தடி எரிபொருட்களான எரிவாயு, நிலக்கரி,பெற்றோலிய எண்ணெய் ஆகியவைகளின் பயன்பாட்டை குறிப்பிட்ட கால அட்டவணைப்படி கைவிட ஒப்புதல் தெரிவித்தனர். பின்,இந்திய அரசே! ஒரு மாநிலத்தின் பெருவாரியான நிலப்பரப்பை மீத்தேன் எடுக்கவும், நிலக்கரி எடுக்கவும் எப்படி ஒதுக்குகின்றீர்கள். இறக்குமதி செய்யப்பட்ட திரவ இயற்கைவாயுவை இந்தியா முழுதும் பரப்ப எப்படி திட்டமிடுகின்றீர்கள்.

மீத்தேன் எடுப்பு லாபமான தொழில் என்பது பெரிய மோசடி..    

மீத்தேன் எடுக்க ஒதுக்கும் காவிரி நிலப்படுகை மிக வளமான நதிப்படுகை. அதன் ஆண்டு வருமானம் 1000கோடிக்குமேல். 52 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள், சுமார் 24 லட்சம் கால்நடைகள், கோடிக்கணக்கான மரங்கள்,பல்லுயிர்கள்,காவிரி நீர் இல்லாத நிலையில் பலவருடங்களாக பயிர் செய்ய உதவும் நிலத்தடிநீர் ஆகியவற்றைக்கொண்ட படுகையில் மீத்தேன் / நிலக்கரி எடுப்பது என்பது பொருளாதாரத்தின் அரிச்சுவடி கூட தெரியாத ஒரு செயல்..

30/35 ஆண்டுகளில் எடுக்கப்படும் மீத்தேன் வாயுவை கால்நடை மற்றும் முனிசிபல் கழிவுகளை பயன்படுத்தி இன்னும் அதிகமான மீத்தேனை தயாரிக்க முடியும். மேலதிக லாபமாக மீத்தேன் கலன்களில் இருந்து கிடைக்கும் உரம் தமிழக வயல்களை வளமாக்கும்.

காவிரி நீரை தடுத்து வைப்பதும் கூட மீத்தேன் கிணறுகள் அமைக்க வயல் வெளிகளை காய்ச்சல்பாடாக வைத்திருக்கவே என ஐயப்பட வேண்டியுள்ளது.!.

தமிழகத்தில் சீர் செய்ய இயலாத சூழல் கேட்டை ஏறபடுத்துகிற நிலவளத்தை கெடுக்கிற மீதேன் திட்டத்தையும் கைவிட வேண்டுமென எமது குழு வற்புறுத்துகிறது.

---------------------------------------------------------------------------------------------------------------------------------

 தமிழ்நாடு விவசாயிகள் தற்கொலை பற்றிய உண்மை அறியும் குழுவினர்

பெயர் மாவட்டம் பின்புலம் செல் பேசி
அலிஸ் பாக் நாகபட்டிணம் இயற்கை விவசாயி/ஆய்வாளர்  
சந்திரசேகரன் கோவை சமூக ஆர்வலர், PUCL 9486036196
மரு.பாரதி செல்வன் மண்ணார்குடி இதய மருத்துவ நிபுணர், சமூக ஆர்வலர். 9443585675
முனைவர் கணேசன் கோவை விவசாய தொழில் நுட்பு நிபுணர் 9092110221
இரணியன் நாகபட்டிணம் சூழலியல் ஆர்வலர் 8608884534
கல்யாண சுந்தரம் தஞ்சாவூர் இயற்கை விவசாயி 9952519588
காவேரி தனபாலன் நாகபட்டிணம் காவேரி பாதுகாப்புக் குழு 9443587352
கிட்டு மதுரை மாணவர் இயக்க ஆர்வலர் 7639628704
குமர வேல் விருது நகர் விவசாய ஆர்வலர் 9047331240
மோகன் ராஜ் கோவை சூழலியல் மற்றும் ஊடக ஆர்வலர் 9442451783
பாமயன் மதுரை இயற்கை விவசாய நிபுணர் 9842048317
பன்னீர் செல்வகுமார் சென்னை ஊடவிய ஆர்வலர் 9962640409
பரமசிவம் தஞ்சாவூர் விவசாய தொழி்லாளி 9944201818
பொன்.சந்திரன் கோவை வங்கி அதிகாரி(ஓய்வு), உளவியலாளர், PUCL. 9443039630
செல்வி சென்னை பெண்ணுரிமையாளர் 9080535115
சுப்பு மகேசு நாகப்பட்டிணம் சூழலியல் ஆர்வலர் 9486524448
தனலட்சுமி கோவை பெண்ணுரிமையாளர், PUCL 8754039630
தங்கப்பாண்டியன் மதுரை சமூக ஆர்வலர் 7402109000
திரு நாவுக்கரசு தஞ்சாவூர் பொறியாளர், இயற்கை விவசாய ஆய்வாளர். 9751554613
விஷ்ணு நாகப்பட்டிணம் சூழலியல் ஆர்வலர் 8124312315
Pin It