Venkat K Narayanaதமிழ்நாடு அரசின் சார்பில் தமிழகப் பிரதிநிதியாகத் திரு கே.வெங்கட நாராயணா என்னும் கன்னடர் நியமிக்கப்பட்டுள்ளார் என்னும் செய்தி அதிர்ச்சியைத் தருகிறது! முதலமைச்சர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர் அவர் என்பதே அவருக்கான ஒரே தகுதியாக இருக்கிறது!

இதற்கு முன்பு கம்பம் செல்வேந்திரன், ஏ.கே.எஸ்.விஜயன் போன்ற அரசியல் அனுபவம் உள்ளவர்கள் அந்தப் பொறுப்பில் இருந்தனர். இப்போது எந்த அனுபவமும் அற்ற, தமிழ்நாட்டு அரசியலில் எந்தப் பங்கும் வகிக்காத, தமிழராகவும் அல்லாத ஒருவர் நியமிக்கப்பட்டு இருக்கிறார் என்பது தமிழர் நலன் எவ்வளவு அட்சியப்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதற்கான சான்றாக உள்ளது!

இன்னொரு வேதனையான அறிவிப்பும், தமிழ்நாடு அரசின் அமைச்சர் செங்கோட்டையனிடம் இருந்து வெளியாகி உள்ளது! மாணவர்களின் அடையாள அட்டையில் அவர்களுடைய பெயர், ரத்தவகை, முகவரி, இவைகளைத் தாண்டி, அவர்களின் சாதி பற்றிய குறிப்பும் இடம்பெறும் என்று அமைச்சர் கூறி உள்ளார்!

சாதியின் அடையாளமாக, மாணவர்கள் கைகளில் கட்டி இருக்கும் கயிறுகளையே தடைசெய்ய வேண்டும் என்று நீதிபதி சந்துரு அவர்களின் தலைமையிலான குழு அறிவித்திருந்தது. இப்போது அடையாள அட்டையிலேயே சாதியைக் குறிப்பிடுவது எதற்காக என்பதும், எந்த விதத்தில் இது நியாயம் என்பதும் புலப்படவில்லை!

இதுபோன்ற அறிவிப்புகளையும், எதிர்த்துக் கேள்வி கேட்கும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு போன்றோர் வீடுகளில் அரசியல் உள்நோக்கத்துடன் சோதனைகள் நடத்துவதையும், திராவிட இயக்கத் தமிழர் பேரவை மிக வன்மையாகக் கண்டிக்கிறது!

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.