1965ஆம் ஆண்டு, இந்தித் திணிப்பை எதிர்த்து நடைபெற்ற மொழிப் போரின் 50ஆம் ஆண்டான, இவ்வாண்டு தமிழ்த் தேசியப் பேரியக்கத்தால் போராட்ட ஆண்டாகக் கடைபிடிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் செயல்படும் இந்திய அரசு நிறுவனங்களின் அலுவலகங்களில், வாடிக்கையாளர் களும், பயனாளிகளும், அலுவலர்களும் பெரும்பா லோர் தமிழர்களாக இருக்க, அவ் அலுவலகத் தொடர் புகள் பெரிதும் இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே இருப்பது சனநாயகத்திற்கும், பார்வையில் கண்டுள்ள சட்ட விதிகளுக்கும் எதிரானதாகும்.

இந்திய அரசின் இந்தி மொழித் திணிப்பை எதிர்த்து தமிழ்நாட்டில் 1965இல் நடைபெற்ற தமிழ் மொழி காக்கும் போராட்டத்தில் 300 பேருக்கும் மேற் பட்ட தமிழ் இளைஞர்கள் உயிர் ஈந்ததன் விளைவாக 1963, அலுவல் மொழி சட்டத்தில் திருத்தங்கள் மேற் கொள்ளப்பட்டன.

இதன் அடிப்படையில், அலுவல் மொழிகள் சட்ட விதி 1976இன் பிரிவு 1 இந்திய அரசுத் துறை அலுவல கங்கள், ஆணையங்கள், நிறுவன அலுவலகங்கள் ஆகியவை “தமிழ்நாடு தவிர இந்தியா முழுமைக்கும் இந்தி அல்லது ஆங்கிலத்தை அலுவல் மொழியாகக் கொள்ள வேண்டும்” என அறிவிக்கிறது.

ஆனால், தமிழ்நாட்டில் இயங்கும் தங்கள் அலுவ லகத்தில் இந்தி, ஆங்கிலம் ஆகியவை அலுவல் மொழி யாகச் செயல்படுவது இச் சட்ட விதிக்கு முரணானது என்பதை எடுத்துக்கூறியும், இச்சட்டவிதியின் பிரிவு 4 (மீ) (வீவீ) தங்கள் தலைமையகத்திலிருந்து இந்தியிலோ, ஆங்கிலத்திலோ வரும் அறிவிப்புகள் தமிழ்நாட்டில் தமிழில் மொழிபெயர்த்து அனுப்பப்பட வேண்டும் என கட்டாயக் கடமையாக வலியுறுத்துகிற போதிலும், இந் நிறுவனங்கள் அதை பின்பற்றவில்லை என சுட்டிக் காட்டியும், தமிழகமெங்கும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் இந்திய அரசு நிறுவனங்களில் மனு அளிக்கப் பட்டு வருகிறது.

இவ்வாறு இந்திய அரசு நிறுவனங்களில் தமிழ் மொழி அலுவல் மொழியாக இல்லாதிருப்பது சட்டத் திற்கு எதிரானது மட்டுமல்ல, தமிழின ஒதுக்கலும் ஆகும்.

இந்திய அரசு நிறுவனங்கள் மற்றும் அலுவலகங் களின் வாடிக்கையாளர்கள், பயனாளிகள் ஆகியோருட னான தொடர்புகளும், தங்கள் அலுவலக ஆவணங்கள், கோப்புகள் உள்ளிட்ட உள்ளகத் தொடர்புகளும் தமி ழில் மட்டுமே இனி இருக்க வேண்டும் எனவும், அந் நிறுவனங்கள் தங்கள் அனைத்திந்தியத் தலைமையகத் துடனான தொடர்புகள் மட்டும் தேவை கருதி ஆங்கிலத்தில் இருக்கலாம் என்றும் விளக்கி, இந்த மாற்றங்களை செய்யக் கோரும் கோரிக்கைக் கடிதத்தை, பல்வேறு பகுதிகளிலும் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர்கள், அந்தந்த பகுதி இந்திய அரசு நிறுவன அலுவலகங்களில் வழங்கி வருகின்றனர்.

சாமிமலை
சாமிமலையில் 09.02.2016 அன்று, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB), இந்திய அரசு வங்கி (SBI), இந்திய அரசுத் தொலைப்பேசி இணைப்பகம் (BSNL Exchange Office, தொடர் வண்டி நிலையம் ஆகிய இந்திய அரசு நிறுவன நிர்வாகிகளிடம் மேற்கண்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை, தமிழ்த் தேசியப் பேரியக்க சாமி மலைக் கிளைச் செயலாளர் தோழர் முரளி மதியரசன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் தீந்தமிழன், தமிழ்த் தேசியன், சிவக்குமார் உள் ளிட்ட த.தே.பே. தோழர்கள் நேரில் சென்று வழங்கினர்.

ஒசூர்
ஒசூரில், 10.2.2015 அன்று காலை 10 மணியளவில், இந்திய அரசு நிறுவனங்களான தொடர்வண்டி நிலையம், இந்தியன் வங்கி, இந்திய அரசு வங்கி ((SBI), கனரா வங்கி, மெர்கண்டைல் வங்கி, ஆயுள் காப்பீட்டுக் கழகம், கலால் மற்றும் வருமானவரித்துறை அலுவலகங் களில், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற் குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து, தோழர்கள் கு.செம்பரிதி, துரைராசு, பழ.இரமேசு, சிவபெருமாள், மணிமொழி, அபிராமி உள்ளிட்டோர் நேரில் சென்று மனு அளித்தனர்.

திருச்சி
திருச்சியில், 11.02.2015 அன்று காலை 10 மணியளவில், இந்திய அரசு நிறுவனங்களான தலைமை அஞ்சல் அலுவலகத்தின் அஞ்சல்துறை உதவி இயக்கு னர் (பணிகள்), தொலைப்பேசித் துறை மண்டல அலுவ லக முதன்மைப் பொது மேலாளர், கலால், உற்பத்தி, சேவை வரித்துறை மண்டல அலுவலகக் கண்காணிப் பாளர், வருமானவரித்துறைத் தலைமை அலுவலக இணை ஆணையர் ஆகியோரிடம், தமிழ்த் தேசியப் பேரியக்கம் திருச்சிராப்பள்ளி செயலாளர் தோழர் மூ.த. கவித்துவன், தலைமை செயற்குழு உறுப்பினர் தோழர் அ. ஆனந்தன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் நா. இராசாரகுநாதன், தோழர்கள் ச.முத்துக்குமாரசாமி, ப.மாதேவன், மு.வ.இரத்தினம் உள்ளிட்டோர் நேரில் சென்று மனு அளித்தனர்.

மதுரை
மதுரையில், 11.2.2015 அன்று காலை 10 மணியளவில், இந்திய அரசு நிறுவனங் களான கலால்வரித்துறை, வருமானவரித் துறை, தொலைப்பேசி தொடர்புத்துறை அலுவலகங்களில், தமிழ்த் தேசியப் பேரியக்க மதுரை மாநகரச் செயலாளர் தோழர் ரெ.இராசு, மகளிர் ஆயம் தோழர்கள் செரபினா, மேரி, சந்திரா, தோழர்கள் கரி காலன், சிவா, கதிர் நிலவன், காமராசு, தியாகலிங்கம் ஆகியோர் நேரில் சென்று மனு அளித்தனர். கலால்துறை ஆணையாளர், மதுரை மாவட்ட தொலை தொடர்புத் துறை பொது மேலாளர், வருமானவரித் துறை ஆணையாளர் ஆகியோரிடம் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.

சிதம்பரம்
சிதம்பரத்தில், 11.02.2015 அன்று, தமிழ்த் தேசியப் பேரியக்க நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம் தலைமையில் சென்ற தோழர்கள், சிதம்பரத்தில் இயங்கும் இந்திய அரசு நிறுவனங்களான தொடர் வண்டி நிலையம், பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, தலைமைத் அஞ்சலகம், பி.எஸ்.என்.எல் தொலைப்பேசி - தொலைத் தொடர்பு அலுவலகம், பஞ்சாப் நேஷ்னல் வங்கி ஆகிய நிறுவன நிர்வாகி களிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

தமிழக இளைஞர் முன்னணி தமிழக துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன், பொதுக் குழு உறுப்பினர் வி.கோவேந்தன், தோழர்கள், இரா. எல்லாளன், ப.க. கார்த்திக், செ. மணிமாறன், இரா. அறன் உள்ளிட்டோர் நேரில் சென்று மனு அளித்தனர்.

குடந்தை
குடந்தையில், 12.02.2015 அன்று காலை 10 மணியளவில், இந்திய அரசு அலுவலங்களில் தமிழ் அலுவலக மொழியாக்க வேண்டும் என வங்கிகள், அஞ்சல் நிலை யங்கள், காப்பீட்டு அலுவலகம், தொலை தொடர்புத் துறை போன்ற 18 அலுவலகங்களில், குடந்தை த.தே.பே. நகரச் செயலாளர் க.விடுதலைச்சுடர் தலைமையில் கோரிக்கை மனுக் களை அளித்தனர். த.தே.பே. பொதுக்குழு உறுப்பினர் தோழர் க. தீந்தமிழன், தோழர்கள் செழியன், அன்பு, தேவராயன் பேட்டை பிரபாகரன், புண்ணியமூர்த்தி உளளிட்டத் தோழர்கள் இதில் கலந்து கொண்டனர்.

பெண்ணாடம்
பெண்ணாடத்தில் 13.02.2015 அன்று தோழர் அரா.கனகசபை (கிளைச் செயலாளர், த.தே.பே.) தலைமையில் 9 பேர் கொண்ட குழுவாக சென்று மனு அளித்த னர். பெண்ணாடம் தபால் நிலையம், தொடர் வண்டி நிலையம், கனராவங்கி, இந்தியன் ஓவர்சீஸ்வங்கி, ஆகிய இடங்களிலும் முருகன் குடி கனரா வங்கி, தபால் நிலையத்திலும், கருவேப்பிலங் குறிச்சி ஸ்டேட்பேங்க் ஆப் இண்டியா வங்கியிலும், விருத்தாச்சலத்தில் ஸ்டேட்பேங் ஆப் இண்டியா, அஞ்சல் நிலையம், ஆயுள் காப்பீட்டு நிறுவனம், இந்திய தொலைத் தொடர்பு நிறுவனம், தொடர்வண்டி நிலையம், ஆகிய அலுவகங்கள் தொடர்பான அதிகாரிகளைச் சந்தித்து கடிதத்தின் நோக்கங்களை விளக்கி கொடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் க. முருகன், தமிழக இலைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் சி.பிரகாசு, மாணவர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் மா. மணிமாறன், த.இ.மு. உறுப்பினர் கள் இளநிலா,மு.பொன்மணிகண்டன், தி. தினேசுகுமார், சி.பிரபாகரன், செ.விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Pin It