உலகமயமாக்கல் கோட்பாடு களினால் பூமிப்பந்தின் தென்பகுதி நாடுகளில் வாழும் மக்களின் வாழ் வாதாரங்கள் பறிபோவதைக் கடந்த இருபதாண்டு காலமாகக் கண்கூடாகக் காண்கிறோம். இக் கோட்பாடுகளின் மோசமான விளைவுகளை விளக்கி நாள் தோறும் எண்ணற்ற நூல்கள் வெளி வருகின்றன.

ஏகாதிபத்திய உலகமயமாக் கலின் முழுப் பரிமாணத்தையும் அனைவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் நல்ல தமிழில், எளிய நடையில் இந்நூலினைப் படைத் துள்ளார் ஆசிரியர் எம்.ஏ.சேவியர் மதுரை அருளானந்தர் கல்லூரியின் வரலாற்றுப் பேராசிரியரான முனைவர் சேவியர் அக்கல்லூரியின் செயலரும் ஆவார்.

ஐக்கிய அமெரிக்க நாட்டு எழுத்தாளர் ஜான் பெர்க்கின்ஸ் முதல், நாளிதழ் தீக்கதிர் வரை நிறைய படைப்புகளிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளார். உலகமயக் கொள்கை என்பது அரசியல், பொருளாதாரம், வரலாறு, தத்துவம், பண்பாடு, கலாச்சாரம் என்று பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்கியதாகும். ஏகாதிபத்தியங்கள் அன்று ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா நாடுகளைக் காலனிகளாக மாற்றி தெற்கு நாடுகளின் இயற்கை வளங்களை யும், மக்களின் உழைப்பையும் சுரண்டிக் கொழுத்தன. இன்று காலனிகள் எல்லாம் அரசியல் விடுதலை பெற்ற பின்னரும் எவ்வாறு பொருளாதாரச் சுரண்டல் தொடருகிறது என்பதைத் தெளி வாக்குகிறார்.

பன்னாட்டு பகாசுரக் கம்பெ னிகள், உலகவங்கி, சர்வதேச நிதி மையம், உலக வர்த்தக சபை என்ற மூன்று அமைப்புகளையும் தங் களின் கோரப்பிடிகளுக்குள் வைத் துக் கொண்டு ஏழை மக்களை மேலும் மேலும் வறுமைக்குள் தள்ளுகின்றன என்பதை எடுத்துக் காட்டுகளுடன் விளக்குகிறார்.

நூலின் கடைசி அத்தியாயமான “மாற்று உலகம் சாத்தியமே” என்ற பகுதியில் முதலாளித்துவத்திற்கு மாற்று என்ன என்பதைச் சொல்ல வரும் ஆசிரியர் அது ‘சோசலிசம்’ தான் என்று ஒற்றைச் சொல்லில் ஆணித்தரமாகச் சொல்லியிருக்கலாம். ஏனோ தயக்கம்? ஜேசு சபையைச் சேர்ந்தவர் என்பதனால் வந்த கட்டுப்பாடா?

செம்மலர் ஆசிரியர் எஸ்.ஏ. பெருமாள் அவர்களின் பொருத்தமான அணிந்துரையுடன் வந்திருக் கும் இந்நூல் அனைவரும் படித்துப் புரிந்து கொள்ள வேண்டிய நூலாகும்.

வைகறைப் பதிப்பகம், மெயின் ரோடு, திண்டுக்கல், விலை : ரூ.50.

Pin It