கிருஷியின் மழை வரும் பாதையில்... கவிதை தொகுப்பை வாசிக்கும் போது ஒவ்வொரு கவிதையிலும் நம் கண்முன்னே வந்து நிழலாடுகிறார். நெல்லை யில் புறப்பட்டு வயல்வெளி களிலும், நீரோடைகளிலும், ஆற்றிலும், வானத்திலும், மழை யிலும், ஏன் அண்ட வெளியிலும் வண்ணக்கலவையை தூரிகை மூலம் வரைந்துவிட்டு போகிறார். இயற் கையை மனிதனை இப்படியெல் லாம் கூட நேசிக்கலாமா?

மறக்காமல் கறுப்பு வண் ணத்தை மட்டும் ஹிட்லர், முசோலினி, புஷ், ரீகன் முகங்களின் மீது பூசிவிட்டு போகிறார்.

இயற்கையை நேசிப்பதோடு மானுடத்தின் சகல பகுதியையும் நேசிக்கிறார். மேலும்

கோலத்தை கொத்தும் சிட்டுக்குருவி,
இருட்டில் நெருப்பை உமிழும் பூனையின் கண்கள்,
நதியோடு ஒளிதுள்ள விளையாடும் பொன்மீன்
தன்னால் வந்தமரும் நுனி விரலில் வண்ணத்துப்பூச்சி
சுரக்கும் நெஞ்சுடன் தேனீக்களின் ரீங்காரம்
குயிலின் கேவல் இளங்காற்றில் சிறகடிக்கும்
என உயிரின வரிசை அவர் கவிதைகளில் பண் இசைக்கின்றன.
கக்கத்தில் இடுக்கியபடி
கலாச்சார பேழையுடன்
வேற்று கிரகமா
போக முடியும்?
மானிடனே நீ சிந்தி என கிருஷி போதிக்கிறார்.
“தடாக அலைகளில்
அவிழ்கிறது
தாமரை இதழ்கள்”

“அந்திநேரம் சிலிர்த்துக் கொள்ள
வர்ணங்கள் கொந்தளிப்பு
தளதளக்கிறது வான்தடாகம்”

“குழந்தைக்கும் தெரிகிறது
தாய்க்கும் புரிகிறது
நிலவின் மொழி”.

இயற்கையின் வினையை
இசையோடு கேட்ட அனுபவம்.

அவசியம் படிக்க வேண்டும் . இல்லையில்லை...
மழைவரும் பாதையில்... நாம் பயணிக்க வேண்டும்.
ஆனந்த மழையில் நனைந்து கொண்டே...
இசக்கியின் அட்டைப்படம் உட்பட அச்சும் அழகு.
வம்சி புத்தகம் வெளியீடு.
விலை - ரூ.60.

Pin It