சொற்களிடம் காட்டுவேன்
என அதிகப்படியான
மரியாதையை எப்பொழுதும்
முரண்பாடான
வடிவ உடன்பாடுகளுடன்
பரஸ்பர ஒற்றுமையை வளர்க்க
நிரந்தரமாகப் போராடும் குணம்
அவைகட்குண்டு
கூட்டங்களாக பவனி
வரும் போதும்
கூற வேண்டிய கருத்துக்கள்
முற்றுமாக மழுங்கடிக்கப்படும்
அல்லது சிதைந்து விடும்
உணர்வுகள் சற்றே
கூடுதலாக ஒத்துழைப்பின்
ஒற்றைச் சொல்லிற்கு
எப்போதும் அடுத்தவரை
ஆளும் திறம் உண்டு.
அலையென வந்து விழும்
தட்டையான சொற் கூட்டங்களில்
கடைசி வார்த்தை அல்லது
கடைசி வரி நிச்சயம்
கைத்தட்டலைப் பெறும்
சுதந்திரம் இழந்த சொற்கள்
குறைந்தபட்சம் எதிர்பார்க்கும்
அவற்றை அடுத்தவர்கள்
ஆளும் போது
ஒரு சிறிய அனுமதி
அல்லது
ஒருவரின் மொழி ஆளுமை குறித்த
தயக்கத்துடன் கூடிய
பணிவான பிரகடனம்