சொல்லாத சொல் எப்போதும்
ஒரு நிழல் விரிக்கக் காத்திருக்கிறது
ஒவ்வொரு கணமாய் உயிர்பற்றி
கரையொதுங்கிய நூற்றாண்டு 
உயிர் சிற்பமாய் யாசிக்கிறது.
குவிந்துக் கிடக்கும் நிலையை,
புறந்தள்ள எத்தனித்து
பின் இயலாமையால் எஞ்சி நிற்கிறது 
மீள மீளவும் பார்க்கிறது
முடிவு தெரியா கரையொதுங்கிய
கற்றைக் கிளிஞ்சல்களாய் எஞ்சியேவும் ஆர்ப்பரிக்கிறது
தூர காற்றில் மெல்லவரும் பிரியத்திக்குரியவர்களின்
குரலாய் உருவாய் மாறி மாறி 
இடம் கொள்கிறது
பின் எப்போதும் போல இதயக்கூட்டில்
அடைந்தேவும் அச்ச மூட்டுகிறது.

-ஆனந்தி ராமகிருஷ்ணன்

Pin It