விரிவாக்கம் செய்யப்படாத

இரைச்சலற்ற சாலை

வார்த்தைகளை உருட்டியபடி

பெருத்த பெண்கள்

புத்தகம் வாசித்தபடியும்

செய்திச் சுருளை கைக்கொண்டும்

ஒன்றிரண்டு பேர்

``உல்லாச உலகம் உனக்கே சொந்தம்"

கடக்கும் தினசரி தோறும்

அலைபேசியில் ரசித்தபடி முதியவர்

பிராணிகளோடு பிராணியாக

இளைப்பு வாங்கிடும் நபர்கள்

சாக்கு போக்கோடு சலிப்பைக் கக்கிட

இலையென உதிர்ந்து வரும்

கிளிப்பிள்ளைகளின் கேள்விகள்

அதிசயப்படும்படியாக மாறியது

சர்க்கரை அளவென்றும்

பளு பார்க்க குறைந்தது இரண்டென

நடுவயதினர் நம்பிக்கையூட்டி வர

நடந்து நடந்து கழிக்க வேண்டும்

நகர வாழ்வின் பரிசை.

 

Pin It