அந்திக் கருக்கலில்
அகாலமாய் இறந்துபோன
இளந்தாரியின் சதையுடம்பை
இங்கே தான் புதைத்திருக்கிறார்கள்.
அவன் அழுது தீர்க்கவேண்டிய
கண்ணீர் கடலொன்றையும்
கொட்டித் தீர்க்க வேண்டிய
கோபக் கனலொன்றையும்
பாலோடு பச்சரிசியுமிட்டுப் புதைத்துவிட்டார்கள்.
மறுபாதி எழுதாது
நெற்குருதில் அவன்
இட்டு வைத்த கவிதையொன்றை
அம்மா வான் நோக்கி விட்டெறிந்தாள்
அப்போது வானம்
சிவக்கத் தொடங்கியிருந்தது.

- பூவன்னா சந்திரசேகர்

Pin It