வணக்கம்!
 
தோழர் தியாகுவின் பட்டினிப் போராட்டம் அக்.1-ல் தொடங்கியது அனைவரும் அறிந்ததே. இலங்கையை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து நீக்க வேண்டும், இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது, மீறி நடந்தால்,இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கு கொள்ளக் கூடாது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இப்போராட்டத்திற்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் இயக்கங்கள், கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
 
அரசியல் இயக்கங்கள், கட்சிகளின் ஆதரவின் பெயரிலும், அவர்களின் போராட்ட அறிவிப்புகளிலும், மாணவர்களின் போராட்ட அறிவிப்புகளிலும், பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த போராட்ட அறிவிப்புகளிலும் நம்பிக்கை வைத்து பட்டினிப் போராட்ட வடிவத்தை மாற்றிக் கொள்ள முடிவெடுத்திருந்தார் தோழர் தியாகு. அந்த நேரத்தில், மன்மோகன் சிங்கிடமிருந்து இப்போராட்டம் பற்றிக் குறிப்பிடப்பட்டு ஒரு கடிதம் தி.மு.க வழியாக வந்தது. அனைத்துக் காரணிகளையும் குறிப்பிட்டு, தோழர் தியாகு பட்டினிப் போராட்டத்தை முடிப்பதாக அக்.15 அன்று அறிவித்தார். போராட்டம் வேறு வடிவங்களில் தொடரும் என்றும் அறிவித்தார்.
 
ஆனால், பட்டினிப் போராட்டம் முடிந்த பிறகு போராட்டத்தையே கொச்சைப்படுத்தும் விதமாக பல அவதூறுகள் வருவதைப் பார்க்க முடிகிறது. தோழர் தியாகுவுக்கு தெரியாமல் கோரிக்கைகளை திசை திருப்பி விட்டார்கள் என்று இலங்கையில் காமன்வெல்த் எதிர்ப்பியக்கம் மீதும் விமர்சனங்கள் வருவதைப் பார்க்கிறோம்.
 
மாற்றுக் கருத்துகளை நேர்மையாக அரசியல் விமர்சனம் செய்வது தான் ஆரோக்கியமான அரசியல். அது நம்மை மேம்படுத்தும். அடுத்த கட்டத்திற்கு இட்டுச் செல்லும். ஆனால், வெறும் அவதூறுகளால் எந்தப் பயனும் இல்லை.
 
கோரிக்கைகள் மீதான விமர்சனங்களுக்கும், எதிர்ப்பியக்கம் மீதான விமர்சனங்களுக்கும் தோழர் தியாகு பதில் சொல்கிறார்.
 

- இலங்கையில் காமன்வெல்த் எதிர்ப்பியக்கம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It