கம்பென்றும்

சோளமென்றும்

களியென்றும்

கொள்ளென்றும்

திணையென்றும்

சாமையென்றும்

வரகென்றும்

பெரண்டையென்றும்

ரக்கிரியென்றும்

அகத்தியென்றும்

வகைக்குஒன்றாய்

வகைவகையாய்

கோடைவிடுமுறைக்கு

மண்சட்டியில்

இட்டுவைத்தாள்

ஊருக்குமகனுடன்வந்தஎனக்கு

என்அம்மா!

உடனேமகன்சொன்னான்

"பாட்டிஇதெல்லாம்சுத்தபோர்

பர்கரும்பீட்ஸவும்எடுத்துவை'

"குசுவேவராதசோறுதாண்டா

உங்களுக்குப்பிடிக்கும்' என்று

அடுப்பங்கரைக்குள்முனங்கிச்சென்றஅம்மாவையேபார்த்துக்கொண்டிருந்தேன்ஏற்கனவேஇதையெல்லாம்தின்றுகொழுத்தநான்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.