பெயர்சொல்லவே

பிள்ளைகள்பிறப்பிக்கப்படுகிறார்கள்.

பிறக்கும்போது

பெயர்இருப்பதில்லைஎவருக்கும்.

அம்மாமுதல்

அடுத்தவர்வரை

அவரவர்ஆளுக்கொருபெயர்சொல்லி

அழைத்துக்கொஞ்சுவர்.

ஜாதகப்படியோ

எண்கணிதம்வைத்தோ

நட்சத்திரம்பார்த்தோ

சூட்டப்படும்ஒருபெயர்.

சூட்டினாலும்செல்லப்பெயரே

நீண்டுவிடுகிறதுசிலவேளை.

பள்ளியில்சேர்க்கும்போது

பதியப்படுகிறது

புதியபெயர்ஒன்று.

பள்ளியில்பரவலாகிறது

மாணவர்களிடையேபட்டப்பெயர்.

காலத்திற்கேற்பஅமைந்துவிடுகிறது

காரணப்பெயர்.

மாறிக்கொண்டேயுள்ளன

மனிதப்பெயர்கள்.

இறந்தபின்னும்

சுவரொட்டிகளில்விளம்பரங்களில்

அறிவிப்புகளில்

சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்

எல்லோருக்குமான

ஒருபொதுப் பெயருடன்

நிரந்தரமில்லாதது

வாழ்வுமட்டுமல்ல

பெயர்களும்.

Pin It