கொடுக்கக் கேட்க
எதுவும் இயலாத
சிலையிடம் தட்டேந்தும்
அர்ச்சகர்.

உடல்பிரிந்த
உயிரை
சொர்க்கம் சேர்க்க
திதி கொடுக்கும் புரோகிதர்.

பேய்களை
விரட்டுவதாக
உடுக்கை கிழிக்கும் பூசாரி.

தொலைந்த வாழ்வை
தேடித் தருவதாய்க்
கைரேகை பார்த்து
பிதற்றும் சோதிடர்.

இவர்கள்
யாவரும் அறிந்ததே
யாவும் பிழைப்பென.

More articles by ஆ.இந்திரபிரகாஷ்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.