உறவு முறைச் சொல்லி
உரிமையுடன் பேசுவது
ஒரு சிலர் பழக்கம்.
அவர்கள் பேசுவது கேட்கவே
ஆசையாக இருக்கும்
அப்படியே பேசுவாள்
எங்கள் தெரு பாட்டி.
அவள் வயதொத்தவளைக் கண்டால்
“அண்ணி கண்டுக்கவே மாட்டிங்கறியே”
என்பாள்.
இளையவர்களிடம் பேசும் போது
“என்னடி மவளே
மருமவன் நல்லா வைச்சிருக்கானா”
அக்கறையுடன் விசாரிப்பாள்.
விளையாடும் பையன்களிடம்
"பாட்டிகிட்ட
பேசமாட்டியா பேரான்டி'
என்பாள்.
தெருவில் இருப்போர், கடப்போர் என
எல்லோரையும் உறவாகவே
உரிமையுடன் பேசும் பாட்டி
பிள்ளைகளிடமிருந்து
கைவிடப்பட்டு தனித்தே
வாழ்கிறாள்.
கருக்கல் விடியும் - ஜூன் 2013
பாட்டி
- விவரங்கள்
- பொன்.குமார்
- பிரிவு: கருக்கல் விடியும் - ஜூன் 2013
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.