இன்று ஈழ விடுதலைப் போராட்டம் தீவிரமாக பின்னடைவுக்கு ஆளாகியுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமையையும் அமைப்பையும் ஒழித்துக் கட்டியமை, 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அண்மைய இலங்கை அரசாங்கத் தாக்குதலில் மட்டும் உயிரிழப்பு, 3 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் முகாம்களில் வதைப்படும் நிலை என இன்றைய நிலையை விவரிக்கும்.

anஇன்றைய பின்னடைவுக்கு இலங்கை அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் புறக் காரணங்களாக இருக்கையில், முதன்மையான அகக் காரணமாக விடுதலைப் புலிகளின் அரசியல் வழியை கூறலாம். இந்தக் கட்டுரையானது ஈழ மக்களின் இன்றைய அவல நிலைக்கு எவ்வாறு நெடுமாறனும் வைகோவும் துணை அகக் காரணமாக செயற்பட்டனர் என்பதைக் கூறுவதையே நோக்கமாக உடையது.

முதலாவதாக இந்தியாவின் பிரதமராக இந்திரா காந்தி இருந்தபோது விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு எல்லா வகையான உதவிகளையும் செய்யுமாறு அவரிடம் நெடுமாறன் மண்டியிட்டார். அதுமுதற்கொண்டு இந்திய அரசாங்கம் இன்றுவரை ஈழ விடுதலைப் போராட்டத்தை சீர்குலைத்து இன்றைய அவல நிலைக்கு கொண்டுவந்து விட்டுள்ளது.

இந்தியாவிற்குள்ளேயே தேசிய விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் இந்திய அரசாங்கம் எப்போது அடுத்த நாட்டில் நடைபெறும் அத்தகைய ஒரு போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்கும்? நெடுமாறன், இந்திராவிடம் மண்யிட்டபோது இந்திய அரசாங்கம் பஞ்சாபிலும் அசாமிலும் தேசிய இன போராட்டங்களைக் குருதிவெள்ளத்தில் மூழ்கடித்துக் கொண்டிருந்தார்.

இந்தியாவும் உதவி செய்ய ஆரம்பித்தது. ஈழம் விடுதலையை பெறுவதற்காக அல்ல. மாறாக தெற்காசிய பேட்டை ரவுடித்தனத்தை இலங்கை அரசாங்கத்திடம் காட்டுவதற்காகவும் ஈழ விடு தலைப் போராட்டம் சுயமாக வளர்ந்து கையை மீறி சென்றுவிடக்கூடாது என்பதற்காகவும்தான் உதவி செய்ய ஆரம் பித்தது. விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு மட்டும் என்று இல்லாமல் டெலோ, ஈபிஆர்எல்எப், பிளாட் போன்ற அமைப்புகளுக்கும் எல்லா வகையான உதவிகளையும் செய்து தனது கட்டுப்பாட்டிற்குள் பெற்றுக் கொள்ளத் தொடங்கியது.

இந்திய அரசாங்கம் தனது வெளியுறவுத்துறையின் மூலமாக இச்சிக்கலை அணு காமல் "ரா' உளவுத்துறையின் மூலமாகவே அணுகி இன்றுவரையிலும் அதுவே அடிப்படையாகத் தொடர்கிறது என்பதிலிருந்தே அது பாதுகாப்பு மைய அணுகுமுறையிலும் விரிவாக்க அணுகுமுறையிலுமே கையாண்டு வருகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இதன் அங்கமாக அனைத்து போராளி அமைப்புகளுக்கு இடையிலும் உள்ளேயும் சண்டை மூட்டிக் பிளவுப்படுத்துவது எனத் தொடங்கி தனது கைப்பாவையாக செயற்படுவதுவரை கையாண்டது.

1983 87 காலப் பகுதியில் இந்தியப் படை இலங்கைக்கும் சென்று தமிழ் மக்களைக் காக்க வேண்டும் அல்லது பங்களாதேஷ் போன்று தனிநாட்டை அமைத்துத் தர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார் நெடுமாறன். கருணாநிதியும், குமரி அனந்தனும், வீரமணியும், இரா.ஜனார்த்தனனும் கூட இதையே கூறினர். அப்போது மா.லெ. அரசியல் அமைப்புகள் தான் இந்தக் கோரிக்கையைத் தவறு என்று கூறி இந்தியப் படையானது விரிவாக்கப்படை எனவும் பங்களாதேஷ் என்ற தனிநாட்டை உருவாக்கியது என்பது தெற்காசியாவில் இந்தியாவின் மேலாதிக்கத்தை ஏற்க மறுக்கின்ற பாகிஸ்தானை உடைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டதாக அல்லா மல் பங்களாதேஷ் மக்களின் விடுதலை மீதான அக்கறை அல்ல எனவும் தெளிவுப்படுத்தின. இதைக் காதில் வாங்கி கொள்ளவில்லை இவர்கள். 198387 முழுவதும் இதையே உச்சரித்துக் கொண்டிருந்தனர்.

இறுதியாக 1987ல் ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் அங்கமாக இந்திய ராணுவம் இலங்கை சென்றது. அந்த ஒப்பந்தமும் தமிழ் மக்களைக் காப்பதற்கல்ல; இந்திய ராணுவம் இலங்கைக்கு சென்றதும் அதற்காகவே அல்ல. மாறாக இலங்கை இனவாத, இந்திய மேலாதிக்க அரசாங்க நலன்களைக் காக்கவே சென்றது.

இந்திய ராணுவம் ஈழம் சென்ற பிறகு ஓரிரு மாதங்களிலேயே அது திரும்ப வருமாறு கூறப்பட்டது. அது உடனே திரும்பவில்லை. நோக்கமும் அதுவல்ல. நோக்கம் நிறைவேறாமல் எப்படி திரும்பும்? 1990இல் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது தான் அது திரும்பியது. இந்திய ராணுவம் தான் திரும்பி வந்ததே தவிர இந்தியாவின் நலன்கள் கைவிடப்படவில்லை. அதன் அங்கமாக கடந்த 20 ஆண்டுகளாக ஈழ விடுதலைப் போராட்டத்தை சாத்தியமான அளவிற்கு நசுக்கி அதில் தற்போது வெற்றியும் ஈட்டப்பட்டு விட்டது.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற முற்பட்டபோது அப்போதும் இந்தியாதான் அதைத் தடுத்தது. பின்னர் கருணாவை வைத்து விடுதலைப் புலிகள் அமைப்பை உடைத்ததில் இந்தியாவும் பங்காற்றியது. அடுத்து ராஜபக்சே ஜனாதிபதியானபோது எல்லா வகையான உதவிகளையும் ஆதரவுகளையும் ஆலோசனைகளையும் வழங்கி இன்றைய நிலைமைக்கு கொண்டு வந்துவிட்டது இந்திய அரசாங்கம். இப்படிப்பட்ட இந்தியாவைத் தொடர்ந்து வந்தனர் நெடுமாறனும், வைகோவும்.

பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ., சீனா ஆகியவற்றைக் காட்டி மேலேப் பார்த்த இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்பு மைய அணுகுமுறைக்கு தீனிப் போட்டனர். ஆனாலும் இந்திய அரசாங்கம் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை.

விடுதலைப்புலிகளை இவர்களை ஆதரித்து வருகிறார்கள் என்பது உண்மையே; ஆனால் விடுதலைப்புலிகள் பெரிய அமைப்பாயிற்றே; அவர்களே சுயமாக முடிவெடுப்பார்கள்; நெடுமாறனும், வைகோவும் சொல்வதை அப்படியே கேட்பார்களா என்ற கேள்வியும் எழலாம்.

விடுதலைப் புலிகளின் சுயபகுப்பாய்வின் அடிப்படையில் இந்தியாவை நம்பினாலும் இவர்கள் இந்திய அரசாங்கத்தை தன்மையை விளக்கி அம்பலப் படுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு நெடுமாறனும் வைகோவும் செய்ய வில்லை. மாறாக வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற முற்பட்டபோது இந்தியா தடுத்தது என்ற உண்மை ஒருபுறம் இருக்க அத்தகைய பாஜக ஆட்சியானது மீண்டும் வந்தால் விடுதலைப்புலிகளுக்கு சாதகமாகாது என்று செயற்பட்டு வந்தனர். மேலும் இந்தியாவிற்கும் இதர அண்டை நாடுகளுக்கும் (சீனா, பாகிஸ்தான் போன்ற) இடையிலான முரண்டபாட்டைப் பயன்படுத்துமாறு விடுதலைப்புலிகளுக்கும் ஆலோசனை வழங்கி இருக்க வேண்டும்.

சீனாவும், பாகிஸ்தானும்தான் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டது. அவை எவ்வாறு விடுதலைப் புலிகளுக்கு உதவும் எனக் கேள்வி எழக்கூடும்.

vaiko2007 மார்ச்சில் தான் சீனா ராணுவ பொருளாதார அரசியல் பார்வையில் இலங்கை அரசாங்கத்துடன் குறிப்பாக இணைந்தது. ராஜபக்சேவுடன் யுத்தத்தைத் தொடுப்பதற்கு முன்னரே தயாரிப்பு கண்ணோட்டத்தில் இருந்து சீனா அல்லது பாகிஸ்தான் அல்லது பங்களாதேஷ் அரசாங்கத்துடன் உறவை ஏற்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியிருக்க வேண்டும். கண்ணெதிரே உதாரணங்கள் இருக்கின்றன. காஷ்மீர் விடுதலைப் போராளிகள் பாகிஸ்தானைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். அசாம் உல்பா போராளிகள் பங்களாதேஷைப் பயன்படுத்தி வருகின்றனர். கியூபா சின்னஞ் சிறு அமெரிக்காவின் புழக்கடையில் இருந்துகொண்டு கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம், சீனா ஆகியவற்றைச் சார்ந்து அல்லது பயன்படுத்தி தன்னைக் காப்பாற்றிக்கொண்டு வருகிறது. அதேபோல் கடந்த சில ஆண்டுகளாக தம்மைப் பாதுகாத்து வருகின்றன சாவேஸின் வெனி சூலாவும், அஹமெதினாஜின் ஈரானும்.

மேலும், புஷ் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோதே அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான முரண்பாட்டை பயன்படுத்திக்கொள்ளும் வண்ணம் அமெரிக்காவை பயன்படுத்துமாறு ஆலோ சனை சொல்லியிருக்க வேண்டும். இந்தியாவின் இதர மாநில மக்களிடமும் தமிழ் அமைப்புகள் அல்லாத அமைப்புகளிடமும் ஆதரவைப் பெறுமாறு வலியுறுத்தியிருக்க வேண்டும்.

இவ்வாறு நெடுமாறனும் வைகோவும் உருப்படியான ஆலோசனைகளை வழங்காமல் இந்தியாவை நம்பியிருக்குமாறு தவறான சித்திரத்தைக் கொடுத்து அதனடிப்படையில் விடுதலைப்புலிகள் அமைப்பு சில தவறான முடிவுகளை எடுக்க வைத்து ஈழ விடுதலைப் போராட்டத்தைப் பின்னுக்குத் தள்ளவிட்டனர்.

வைகோவும் நெடுமாறனும் மட்டும்தானா? திருமாவளவனும், ராமதாஸ் உட்பட மற்றவர்கள் இவ்வாறு இல்லையா எனவும் கேள்வி எழலாம். விடுதலைப்புலிகள் அமைப்பின் தலை மையுடன் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நெருக்கமாக இருந்து செயல்பட்டது இவர்கள் இருவரும்தான். மற்றவர்கள் பின்னால் சேர்ந்துகொண்டவர்களே.

இவர்கள் இருவரும் ஈழத் தமிழர்களின் அவலத்தைக் குறிப்பிட்ட அளவில் வெளியே கொண்டு சென்றார்கள். (அதுவும்கூட தமிழக அளவில் மட்டும்தான்) என்ற அளவிற்கு உருப்படியான பங்களிப்பை இப்பிரச்சனையில் செலுத்தினர் எனக் கூறலாம். அதுக்குமேல் பார்த்தால் இவர் கள் விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்கு துணைப் போய் அவர்களின் தவறுகளுக்கு வால்பிடித்து ஈழ விடுதலைப் போராட்டத்திற்குப் பின்னடைவை ஏற்படுத்தவ தற்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டனர். இவர்கள் இதை வேண்டுமென்று செய்தனர் எனக் கூறவில்லை. இவர்களின் அரசியல் பார்வையானது இந்தியாவை மையமாகக் கொண்டு (அதுவும் இந்திய மக்களைச் சார்ந்து அல்ல; நேபாள மாவோயிஸ்ட்டுகள் இந்திய மக்களையும், கம்யூனிஸ்ட்டுகளையும் சார்ந்து நிற்பதுபோல அல்ல) இருப்பதே பெரிய இடையூறாக மாறி லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை காவு வாங்கிவிட்டது. இவர்களின் உலகமே இலங்கை அரசாங்கம் மற்றும் இந்திய அரசாங்கம் என்ற இருபரிமாண உலகம் தான். இதையும் தாண்டி உலகம் இருக்கின்றது என்பதையும் அது மாறிக் கொண்டே இருக்கிறது என்பதையும், உடைய முப்பரிமாண பார்வையில்லாததே இவர்களின் பெரிய குறைபாடா கும். இதை இன்றுவரை உணர்ந்த ரில்லை.

இவ்வாறு லட்சக்கணக்கான உயிரிழப் பிற்கு காரணமான பார்வையுடைய இவர்கள் ஈழம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள்.

Pin It