கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

இப்பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டதன் நோக்கம்

தலித் கலை மற்றும் இலக்கியம் தொடர்பான ஆய்வு மய்யங்களைத் தொடங்கி, பராமரித்து, நிர்வகிப்பது.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், பட்டியல் சாதியினர், பழங்குடியினர் சார்ந்த –– கலைஞர்களுக்கு, "கலைஞர் கிராம'த்தை நிர்மாணிப்பது; ஆய்வாளர்கள் எழுதிய இதழ்கள் மற்றும் நூல்களைச் சேகரிக்கவும் பாதுகாக்கவும் ஓர் ஆவணக்காப்பகத்தை உருவாக்குவது; படைப்பாளிகளின் படைப்புகளை வெளியிட ஒரு பதிப்பக மய்யத்தை உருவாக்குவது.

2006–2009 கல்வியாண்டில் பல்கலைக்கழக ஆட்சிக்குழுவின் பல்கலைக்கழக ஆசிரியர் பிரதிநிதியாக ஆசிரியர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரா. அய். இளங்கோவன், தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகப் பிரதிநிதி பேரா. டாக்டர் இல. பிரதாபன் ஆகியோர் 27.12.2006 அன்று நடைபெற்ற ஆட்சிமன்றக் கூட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் ஆய்வுத் துறையைத் தொடங்க வேண்டுமென முன்மொழிந்ததை ஆட்சிக்குழு ஏற்று, ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது.

தற்போதைய துணைவேந்தர் பொறுப்பேற்று இரண்டாண்டுகள் ஓடிவிட்டன. இவர், பணியாளர்களை நியமிப்பதிலும், ஆசிரியர்களை நியமிப்பதிலும், முன்னாள் கல்வி அமைச்சரின் ஏவலாளாகப் பணிபுரிவதிலும் காட்டிய ஆர்வத்தை இதில் காட்டவில்லை.

சென்ற மாதம் பேரா.அய்.இளங்கோவன், துணைவேந்தரையும், பதிவாளரையும் சந்தித்து, டாக்டர் அம்பேத்கர் ஆய்வுத் துறையைத் தொடங்காதது குறித்தும், இனியாவது தொடங்க வேண்டியதன் தேவை குறித்தும் வலியுறுத்தினார். அப்போது துணைவேந்தரும், பதிவாளரும் “அப்படி ஒரு கோப்பு உள்ளதே தங்களுக்குத் தெரியாது'' என்றும், “ஆனாலும் அந்தக் கோப்பினைத் தேடி எடுக்கிறோம்'' என்றும் கூறியது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், இன்று வரை அதற்கான எந்த முயற்சியையும் அவர்கள் செய்யவில்லை.

தற்பொழுது, திருவள்ளுவர் பல்கலைக்கழகமா? தீண்டாமையின் தலைமைக்கழகமா? என்ற கேள்வியை எழுப்பும் தருணம் வந்துவிட்டது. சாதி ரீதியாக பல்கலைக்கழக நிர்வாகம் செயல்படுகிறது என்பதை இந்நிகழ்வு மட்டுமல்லாது, கீழ்க்கண்ட நிகழ்வுகளும் உறுதி செய்கின்றன.

1. மய்ய அரசு ஏற்படுத்தியுள்ள (டெல்லி) டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை, இப்பல்கலைக்கழகத்தில் டாக்டர் அம்பேத்கர் இருக்கையை தொடங்க இசைவளித்துள்ள போதிலும், பல்கலைக்கழக நிர்வாகம் மெத்தனப் போக்கையே கடைப்பிடிக்கிறது.

2. தமிழகத்தின் முன்னோடிப் பல்கலைக்கழகங்களில் (யு. ஜி. சி. – மாநில அரசின் வழிகாட்டுதலின் பெயரில்) தலித் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்களின் பணிசார்–கல்விசார் சிக்கல்களைத் தீர்க்க உதவ உருவாக்கப்பட்டுள்ள பட்டியல் சாதி – பழங்குடியினத்தவர்க்கான சிறப்புத் தனிப்பிரிவு தொடங்கப்படவில்லை.

3. பட்டியல் சாதியினர் – பழங்குடியினரின் குறை தீர்ப்புக்காக இப்பல்கலைக்கழகத்தில் இவ்வினத்தைச் சார்ந்த தகுதியுடைய ஒரு தொடர்பு அலுவலரைக்கூட நியமிக்கவில்லை.

திருவள்ளுவர் பல்கலைக்கழக நிர்வாகம், குறிப்பாக, துணை வேந்தர் டாக்டர் ஜோதிமுருகனின் பொறுப்பற்ற தன்மையைக் கண்டித்தும், நான்கு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் –

பறை முழக்க ஆர்ப்பாட்டம்

நாள் : 9–12–2011 வெள்ளி இடம்: திருவள்ளுவர் பல்கலைக்கழகம்

(சேர்க்காடு) முன் நேரம் : காலை 9 மணி முதல் பிற்பகல் 1.30 வரை

பேராசிரியர் அய்.இளங்கோவன், ஆட்சி மன்ற, கல்விக்குழு முன்னாள் உறுப்பினர், திருவள்ளுவர் பல்கலைக்கழகம்

தொடர்புக்கு : பொன்மலர், 17, விவேகானந்தன் தெரு, திருநகர், வேலூர் – 632 006. பேசி : 94421 74777