* ஆயுத பூஜை பண்டிகையில் 1000 கார்கள் விற்று மாருதி சுசுகி சாதனை.       - செய்தி

                விற்பனை இந்துக்களுக்கு மட்டும் தானே? இல்லேன்னா சிவசேனாக்காரங்க கம்பெனிய நொறுக்கிடுவாங்க...

* மத ரீதியாக பிளவுபட்ட ஒரு சமூகம், அணுகுண்டைவிட ஆபத்தானது.                                    - விஞ்ஞானிகள் குடியரசுத் தலைவரிடம் மனு

                சரியான கருத்து; ‘மதவாதப் பரவல் தடை’ ஒப்பந்தம் ஒன்றை கொண்டு வருவது குறித்து அவசரமாக ஆலோசிக்க வேண்டும்.

* இந்தியாவின் முக்கிய நகரங்களில் திருப்பதி ஏழுமலையான் கோயில்கள் அமைக்கப்படும்.                             - தேவஸ்தானம்

                இதற்கெல்லாம் தனித் தனியா ‘ஸ்தல புராணங்கள்’ எழுதப்படுங்களா...?

* இஸ்லாமியர் ஆட்சி காலத்தில் ‘மதம்’ மாறுவதற்கு மறுத்த ‘பிராமணர்கள்’தான் இன்றைய தீண்டப்படாத மக்கள்.       - பா.ஜ.க. பேச்சாளர் பச்சோங்கர் சாஸ்திரி

                அப்படின்னா இன்றைய ‘பிராமணர்கள்’ எல்லாம் இஸ்லாமியர் காலத்துல ‘முல்லாக்களாக’ இருந்தவங்களா, சார்?

* இந்தியாவில் ‘வாடகைத் தாய்மார்கள்’ இந்தியர்கள் கருக்களையே சுமக்க வேண்டும். வெளிநாட்டினர் கருக்களை சுமக்கத் தடை செய்யப்பட்டுள்ளது.                                             - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு

                சபாஷ்! இதுக்குப் பேருதான் ‘பாரத மாதா’ ஆட்சி!