அம்பேத்கர் கருத்துகளை சிதைத்துப் பேசிவரும் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்தை ஒரே மேடையில் விவாதிக்க கோவை சமூகநீதி இயக்கத் தோழர்கள் நேரில் சென்று அழைத்துள்ளனர்.

‘இந்துவாகப் பிறந்தேன்; ஆனால் இந்துவாக சாகமாட்டேன்’ என்று அறிவித்து புத்த மார்க்கத்தைத் தழுவிய அம்பேத்கரை இந்துக்களின் ஆதரவாளராக பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பேசி வருகிறார்கள். இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த அர்ஜுன் சம்பத் என்பவரும் இதேபோல் பேசி வருவதால் கடந்த ஜூன் முதல் தேதி கோவையில் அவரது இல்லத்தில் கோவை சமூக நீதி அமைப்பைச் சார்ந்த தோழர்கள் வழக்கறிஞர் பன்னீர்செல்வம் தலைமையில் நேரில் சந்தித்தனர். மத்திய அரசின் ‘அம்பேத்கர் பவுன்டேஷன்’ வெளியிட்ட அம்பேத்கர் பேச்சு எழுத்துக்கள் அடங்கிய 8ஆவது தொகுதியை அர்ஜுன் சம்பத்திடம் கொடுத்து அதை படித்துப் பார்க்குமாறு கேட்டுக் கொண்டனர்.

அம்பேத்கர் இந்துக்களின் ஆதரவாளர் என்று தொடர்ந்து உண்மைக்கு மாறாக பேசி வரும் அவரிடம் இது குறித்து நேரில் தங்களோடு விவாதிக்க நாள் குறித்துத் தருமாறும் கேட்டுக் கொண்டனர். விவாதிக்க அர்ஜுன் சம்பத் வருவாரா?

Pin It