கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

‘காட்டாறு’ மாத இதழ் கழகத்தின் அதிகாரபூர்வமானது அல்ல என்று ஏற்கெனவே அறிவித்துள்ளோம். அந்த இதழோடு தொடர்புடைய  தோழர்கள் பொள்ளாச்சி விஜயராகவன்,  தாமரைக் கண்ணன், இராவணன், பல்லடம் விஜயன் - கழகத்தின் பொறுப்புகளிலிருந்து விலகிக் கொள்வதாகவும், ஆனால், கழகத்தில் உறுப்பினர்களாக தொடர்வதாகவும் எழுத்து மூலம் தலைமைக்கு தெரிவித்திருந்தனர்.

ஆனால், கழகத்தின் செயல் திட்டங்களில் இணைத்துக் கொள்ளாமல் அவற்றை விமர்சித்து, தங்களுக்கான தனி செயல் திட்டங்களோடு செயல்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கழக உறுப்பினர்களாக நீடிப்பதிலிருந்தும் அவர்களாகவே விலகிக் கொண்டிருக்க வேண்டும்.

அப்படி விலகிக் கொள்ளாமல், கழக உறுப்பினர்கள் என்று கூறிக் கொண்டே கழக செயல் திட்டங்களோடு முரண்பட்டு செயல்படுவது அமைப்பில் குழப்பங்களை உருவாக்கும் முயற்சிகளேயாகும்.

கழக செயலவையிலும் தோழர்கள் பலரும் இதை சுட்டிக் காட்டினர். எனவே, ‘காட்டாறு’ இதழோடு தங்களை நேரடியாக இணைத்துக் கொண்டு தங்களுக்கான தனித்த செயல் திடடங்களோடு செயல்படும் தோழர்கள் திராவிடர் விடுதலை கழகத்தின் உறுப்பினர்களாக தொடர்ந்து நீடிக்க இயலாது. அவர்கள் கழகத்தின் உறுப்பினர்களாக நீடிக்கவில்லை.