காலை சிற்றுண்டி வழங்குவதன் காரணமாக பள்ளிக் கழிவறைகள் நிரம்பி வழிகின்றன என்ற வர்ணாசிரம திமிரோடு தலைப்பு செய்தி வெளியிட்ட தினமலம் நாளேட்டை கழகத் தோழர்கள் தீயிட்டுக் கொளுத்தினர்.

சென்னை : பள்ளி மாணவர்களுக்கு “காலை சிற்றுண்டி” திட்டத்தை இழிவுபடுத்தி செய்தி வெளியிட்ட சனாதன வெறி பிடித்த தினமலரை கண்டித்து தினமலம் நாளிதழ் எரிப்பு போராட்டம் இன்று 01.09.2023 வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் தினமலம் நாளேடு அலுவலகம் அருகே இராயப்பேட்டை மணிக்கூண்டு அருகில் நடைபெற்றது.

கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் போராட்டத்திற்கு தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் தினமலம் நாளிதழை தீயிட்டு கொளுத்தி தினமலம் நிர்வாகத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்க வளர்மதி, தமிழ்நாடு மாணவர் கழக இரண்யா உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிறைவுரையாற்றினார்.dvk burns dinamalarகழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், கரு.அண்ணாமலை, சேத்துப்பட்டு இராசேந்திரன், மயிலை இராவணன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் : தமிழ்நாட்டில் காலைச் சிற்றுண்டி திட்டத்தையும் பள்ளி மாணவர்களையும் இழிவுபடுத்திய தினமலத்தை கண்டித்து பழனியில் உள்ள தந்தை பெரியார் சிலை முன்பாக கழகத் தோழர்கள் தினமலர் நாளிதழை தீயிட்டு கொளுத்தினர்..

மாவட்ட அமைப்பாளர் மருதமூர்த்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாக்சிம் கார்க்கி, மாவட்ட இணையதளப் பொறுப்பாளர் ராஜா, ஒட்டன்சத்திரத்திரம் ஒன்றிய அமைப்பாளர் கபாலி, பழனி நகர அமைப்பாளர் பெரியார், ஒன்றிய அமைப்பாளர் நாச்சிமுத்து, தமிழ்நாடு மாணவர் கழக ஆயுதன், சூர்யா, தினேஷ், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை மாவட்டத் தலைவர் தமிழ்முத்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் அன்பழகன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

சேலம் : “காலை உணவுத் திட்டம் மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு! ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது!” என்று இழிவான தலைப்பிட்டு செய்தி வெளியிட்ட தினமலம் நாளிதழைக் கண்டித்து 31.08.2023 மதியம் 2 மணியளவில் சேலம் தினமலர் அலுவலகம் முன்பு கழகத் தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈசுவரன் தலைமையில் , சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சக்திவேல் முன்னிலையில், தினமலர் நாளிதழ் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

நங்கவள்ளி கிருஷ்ணன், பாலு, கண்ணன், அருள்குமார், பிரபாகரன், இளம்பிள்ளை தங்கதுரை, திவ்யா, ஏற்காடு தேவா, கார்த்திகேயன், செல்வகுமார், அனேஷ்குமார், சேலம் மாநகரம் வெற்றிமுருகன், தேவராஜ், ஆர்.எஸ். நாகராஜ், மூலப்பாதை கவியரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கொளத்தூர் : தமிழ்நாடு அரசின் காலை உணவு திட்டத்தை இழிவுப்படுத்தி செய்தி வெளியிட்ட சனாதன வெறி பிடித்த தினமலரை கண்டித்து தினமலம் நாளிதழ் எரிப்பு போராட்டம் 01.09.2023 மாலை 4 மணியளவில் கொளத்தூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சூரியகுமார் போராட்டத்திற்கு தலைமை வகித்தார். சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராசு, மேட்டூர் நகர தலைவர் மார்ட்டின், கொளத்தூர் நகர தலைவர் ராமமூர்த்தி, கொளத்தூர் ஒன்றிய பொறுப்பாளர் தர்மலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் தினமலம் நாளிதழை தீயிட்டு கொளுத்தி தினமலர் நிர்வாகத்திற்கு எதிராக முழக்கமிட்டனர்.

தலைமைக் குழு உறுப்பினர் சக்திவேல், சேலம் மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு, தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈசுவரன், தமிழ் புலிகள் கட்சி பிரசாந்த், விசிக கொளத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சேட்டுகுமார், திமுக கொளத்தூர் நகர தலைவர் நடராஜன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

திருப்பூர் : திராவிட மாடல் ஆட்சியின் சிறப்பான திட்டமான பள்ளிக் குழந்தை களுக்கான காலை உணவு திட்டத்தை இழிவுபடுத்தி எழுதிய தினமலம் நாளிதழை எரிக்கும் போராட்டம் 01.09.2023 அன்று மாலை 4.30 மணிக்கு திருப்பூர் பெரியார் சிலை அருகில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு கழகப் பொருளாளர் துரைசாமி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முகில் ராசு முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தினமலம் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டு தினமலர் நாளிதழ்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

ஆதித்தமிழர் பேரவை, புரட்சிகர இளைஞர் முன்னணி,திராவிட தமிழர் கட்சி,மக்கள் பாதுகாப்பு அமைப்பு ஆகிய அமைப்புகள் உள்ளிட்ட தோழமை இயக்கங்கள் பங்கேற்றன.

ஆர்ப்பாட்டத்தில் கழகப் பொருளாளர் துரைசாமி, மாவட்ட கழகத் தலைவர் முகில்ராசு, ஆதித்தமிழர் பேரவை துணைப் பொதுச் செயலாளர் விடுதலைச் செல்வன், புரட்சிகர இளைஞர் முன்னணியின் தமிழ் அமுதன், திராவிட தமிழர் கட்சியின் மண்டல செயலாளர் கார்த்திகேயன், மக்கள் பாதுகாப்பு அமைப்பின் கார்மேகம், மதிமுக கௌரிசங்கர், திமுகவின் அன்புராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்

சங்கீதா, முத்து, மாரிமுத்து, மாதவன், ராமசாமி, அய்யப்பன்,தாராபுரம் செல்வம், ராஜா, ஹரிஷ், ராஜ்குமார், ஆத்துப்பாளையம் மதன், ஜோதி, பரந்தாமன், ஜெகதீசன், அணைமேடு டேவிட்,பிரபாகரன், அமுல்ராஜ், கல்பனா, பாப்பாத்தி, சங்கீதா, பெரியார் பிஞ்சு யாழிசை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

ஈரோடு வடக்கு : 01-09-2023 காலை 11:00 மணியளவில் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் தினமலர் நாளிதழ் எரிப்புப் போராட்டம் பெரியாரிய-மார்க்சிய கூட்டமைப்பு சார்பில் நடைபெற்றது.

கழக வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன், மாவட்டச் செயலாளர் எலத்தூர் செல்வக்குமார், கோபி அருளானந்தம், கோபி நகர பொறுப்பாளர் ரகுநாதன், கோபி நகர செயலாளர் ஜெகநாதன், மாவட்ட இளைஞரணி தலைவர் கலைச்செல்வன், ராஜன் பாபு, இராவணன், குள்ளம்பாளையம் ஆனந்த், திராவிடர் கழக மாநில பொதுக்குழு உறுப்பினர் யோகானந்தம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மு.மாவட்ட செயலாளர் அம்பேத்கர், தபெதிக மாவட்ட செயலாளர் குணா, தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் ப.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட தோழமை இயக்கத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வேலூர் : ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட கழக சார்பாக பார்ப்பனிய தினமலம் நாளிதழ் எரிப்புப் போராட்டம் நெமிலி பேருந்து நிலையத்தில் 01.09.2023 அன்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு திலீபன் தலைமை தாங்கினார். மக்கள் அதிகாரம் மோகன், அரசு ஊழியர் ஐக்கிய பேரவை பாலாஜி, விசிக திருநாவுக்கரசு, தமிழக மக்கள் முன்னணி அன்பு, அம்மு, ஜான்சி, மார்க்ஸிய ராணி, அரவிந்த்ராஜ், நியாஸ், நரேன், பகலவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆளுநரே திரும்பி போ திண்டுக்கல் மாவட்ட கழகம் கருப்புக் கொடி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அன்னை மதர்தெரசா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்தும் அவருக்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் மருதமூர்த்தி தலைமையில் 10க்கும் மேற்பட்ட இயக்கத் தோழர்கள் ஒன்றாக இணைந்து பல்கலைக்கழகம் அருகே கருப்புக் கொடிகாட்டி போராட முயன்ற நிலையில் காவல்துறையினர் அனைவரையும் கைது செய்து பழனி அழைத்து வரப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

தொடர்ந்து தமிழக கவர்னர் R.N.ரவியே திரும்பிப்போ சனாதானத்தின் மறு உருவமே வராதே உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களை எழுப்பியவாறு எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Pin It