தமிழக மக்களை பெரும் அச்சமும் பீதியும் இன்று சூழ்ந்துள்ளது. அடுத்து இந்த அரசு யாரின் உயிரை பலி எடுக்கப் போகின்றதோ என நடுக்கத்துடன் நாட்களை கடத்திக் கொண்டு இருக்கின்றார்கள். சாலையில் பார்க்கும் ஒவ்வொரு காவல் துறையினரையும் தங்களின் வாழ்க்கையை அழிக்கக் காத்திருக்கும் கொலைகாரனாகவும், ரத்தவெறி பிடித்த ஒரு மிருகத்தை பார்ப்பது போலவும் நடுக்கத்துடன் பார்க்கின்றார்கள். அவர்கள் இதுவரை நம்பிக் கொண்டிருந்த ஒரு ஜனநாயக உலகத்தில் இருந்து திடுமென சறுக்கி அதல பாதாளத்தில், மனிதர்களைத் தின்றுவாழும் காட்டுமிராண்டிகள் வாழும் இன்னொரு உலகில் விழுந்து விட்டதாக மனப்பிறழ்ச்சி அடைந்திருக்கின்றார்கள். போராடுவதற்காக அல்ல, இனி தெருவில் அவசரத்துக்கு ஒன்னுக்குப் போனால் கூட சுவச்ச பாரத்தை ஏன் கடைப்பிடிக்கவில்லை என்று குறி பார்த்து குறியில் சுட்டுவிடுவார்களோ என பயப்படுகின்றார்கள். ஸ்டெர்லைட் வேண்டாமென சிந்திக்கும் மூளையையும், அதை வெளிப்படுத்தும் வாயையும் துப்பாக்கிக் குண்டுகளால் சிதறடிக்கும்போது ‘குறியை’ சுடமாட்டார்கள் என்று நாம் எப்படி எதிர்பார்க்கமுடியும்?

sterlite protest slogansஒரு பக்கம் இந்த மண்ணின் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தையும், தங்களின் எதிர்கால சந்ததிகளையும் காப்பாற்ற போராடிக் கொண்டு இருக்கும் போது, இந்த மண்ணின் மக்களைக் கொன்றொழித்தும், காட்டிக் கொடுத்தும், கூட்டிக்கொடுத்துமே இந்த மண்ணில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் பார்ப்பன குற்றக் கும்பல் வழக்கம் போல மார்வாடி அனில் அகர்வாலின் எச்சில் காசுக்கு தமிழ் மக்களின் போராட்டத்தைக் காட்டிக் கொடுக்கும் கீழ்த்தரமான வேலையை செய்துகொண்டு இருக்கின்றது. சமூக வலைதளங்களில் பல போலியான அயோக்கியத்தனமான பொய்களை கொஞ்சம் கூட மான வெட்கமே இல்லாமல் வெளியிட்டுக் கொண்டு இருக்கின்றது. எவ்வளவுதான் முற்போக்கு சக்திகள் அதை அம்பலப்படுத்தினாலும், மீண்டும் மீண்டும் பல்வேறு வழிகளில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி புரட்டுகளை அவிழ்த்துவிட்டுக் கொண்டே இருக்கின்றது. பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்றவற்றைச் சார்ந்த, நாட்டை பெருமுதலாளிகளுக்குக் கூட்டிக்கொடுத்து வயிறு வளர்க்கும் விபச்சாரத் தரகர்கள் தொடர்ச்சியாக தமிழின அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றார்கள்.

பெருமுதலாளிகளின் ஏவல்நாயாக மாறி ஒரு பக்கம் தமிழக அரசும், அதன் காவல்துறையும் தமிழ் மக்களின் ரத்தத்தை குடித்துக் கொண்டு இருக்கின்றது என்றால், இன்னொரு பக்கம் ஊடக விபச்சாரிகள் தங்கள் பங்கிற்கு முடிந்தமட்டும் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வேலையையும், போராட்டத்தைக் காட்டிக் கொடுக்கும் வேலையையும் செய்து வருகின்றனர். அதில் முன்னணியில் நிற்பது தமிழ் தி இந்துவும், தினமலரும் ஆகும். தமிழ் தி இந்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பண்டாரம்பட்டி கிராமத்தில் 20 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பெண் ஒருவர் பேசும் படத்தை வெளியிட்டு அந்தப் பெண்தான் ஆட்சியர் அலுவலகத்தையும், காவல்துறையையும் தாக்குமாறு மக்களைத் தூண்டியதாக ‘காவல்துறைக்கு எதிராக மக்களைத் தூண்டும் பெண்’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு இருக்கின்றது. துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரைக் கொன்ற காவல்துறைக்கு சுடும் உத்திரவை யார் கொடுத்தது என்பதைப் பற்றி புலனாய்வு செய்து வெளியிடத் துப்பில்லாத விபச்சாரக் கும்பலுக்கு, சாமானிய மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் ஸ்டெரிலைட்க்கு எதிராக 25 ஆண்டுகளாகப் போராடியும், அதை மயிர் அளவுக்குக்கூட மதிக்காமல் இருக்கும் அரசுக்கு எதிராக தங்களின் கோபத்தையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தும் ஒரு சாதாரணப் பேச்சை எடுத்து வெளியிட்டு ஒட்டுமொத்த பிரச்சினையுமே இந்தப் பெண்ணால்தான் வந்ததுபோல சித்தரிப்பது, இந்தப் பார்ப்பன 'தி இந்து' தமிழ் மக்களைக் கொல்ல அனில் அகர்வாலுக்கும், அவர்களின் அடிவருடிகளுக்கும் முந்தி விரிக்கின்றது என்று தானே பொருள்.

அக்கிரகாரத்து மாமாக்களின் ஆன்மீக சேவைகளை அம்பலப்படுத்தி ஒருநாள் கூட தங்களின் பத்திரிக்கையை வெளியிடத் துப்பில்லாத இந்த விபச்சாரக் கும்பல், போராடும் மக்களை காட்டிக்கொடுக்கும் வேலையை மட்டும் சிறப்பாக செய்கின்றது. பார்ப்பனியத்துக்கு ஆதரவான பல வரலாற்றுப் புரட்டுகளை கொஞ்சம் கூட மான வெட்கமே இல்லாமல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வெளியிட்டுவரும் இந்தத் தமிழின துரோகக் கும்பல், இன்று அதன் உச்சமாக தமிழ்மக்களை காட்டிக் கொடுத்து பூண்டோடு அழிக்கும் மாமா வேலையிலும் இறங்கியிருக்கின்றது.

பார்ப்பன தமிழ் தி இந்து ஒருபக்கம் தனது வரலாற்றுக் கடமையை செய்கின்றது என்றால், இன்னொரு பக்கம் ஆர்.எஸ்.எஸ் பத்திரிகையான பார்ப்பன தினமலர் போராட்டக்காரர்களை ‘கலவரக் கும்பல்’ என்றும், ‘மாவோயிஸ்ட்கள்’ என்றும் முத்திரை குத்தி அவர்களை சுட்டுக் கொல்வதற்கு அரசுக்கு மறைமுகமாக ஆலோசனை கொடுக்கின்றது. ‘ஸ்டெர்லைட் போராட்டத்திற்குள் மாவோயிஸ்ட்கள்: கண்காணிக்கத் தவறிய உளவுத்துறை’ என்று செய்தி வெளியிடுகின்றது. தங்களை உலகிலேயே பெரிய அறிவாளிகள் என்று பிதற்றித் திரியும் இந்த முட்டாள் கும்பலுக்கு நக்சல்பாரிகளுக்கும், மாவோயிஸ்ட்களுக்கும் அவர்களின் கொள்கைகளுக்கு என்ன வித்தியாசம் என்பது இன்னமும் தெரியவில்லை என்பது அவர்களின் செய்தியில் இருந்தே தெரிந்து கொள்ள முடிகின்றது. காவல்துறையால் வேட்டையாடப்பட்ட மக்கள் அதிகாரம் தோழர் ஜெயராமன் அவர்களும், புரட்சிகர மக்கள் முன்னணியைச் சேர்ந்த தோழர் தமிழரசன் அவர்களும் போராட்டத்தில் கொல்லப்பட்டதை இந்த அக்கிரகாரத்து மாமா பத்திரிக்கை மிக மகிழ்ச்சியாகக் கொண்டாடுகின்றது.

பல ஆயிரக்கணக்கான மக்களை நாசகார தொழில் நிறுவனமான ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராட தினமலர் குறிப்பிடும் மாவோயிஸ்ட்களால் முடிகின்றது என்றால், இந்த அரசு கட்டுமானத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்றுதானே பொருள். அதனால்தானே மக்கள் மாவோயிஸ்ட்கள் பின்னாலும், நக்சல்பாரிகளின் பின்னாலும் அணி திரள்கின்றார்கள். பார்ப்பன தினமலரும், பார்ப்பன தமிழ் தி இந்துவும் அது தாங்கிப் பிடிக்கும் பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், இந்துமுன்னணி வகையறாக்களை மக்கள் ஒரு தெருநாயைப் பார்ப்பதுபோலத்தானே இன்று பார்க்கின்றார்கள். யார் மக்களுக்காக போராடுகின்றார்களோ, யார் அந்த மக்களுக்காகவே தங்களைத் தியாகம் செய்து கொள்கின்றார்களோ அவர்கள் பின்தானே மக்கள் அணி திரளுவார்கள். அப்படி இல்லாமல் காட்டிக்கொடுத்தும், கூட்டிக்கொடுத்தும் வாழும் உங்கள் பின்னாலா அணி திரளுவார்கள்?.

ஸ்டெர்லைட் மற்றும் வேதாந்தாவிடம் இருந்து தலா 15 கோடியும், 22.5 கோடியும் தேர்தல் நிதியாகப் பெற்றுக்கொண்டு ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு முறைகேடான வழியில் 2014 ஆண்டு அனுமதி அளித்தது பிஜேபி அரசு. இன்று ஆயிரக்கணக்கான மக்கள் தெருவிற்கு வந்து போராடக் காரணமாக இருந்ததே ஸ்டெர்லைட் ஆலை உற்பத்தியை இரட்டிப்பாக்க ஆலை விரிவாக்கத்தில் நிர்வாகம் இறங்கிய போதுதான். மக்களின் கருத்தைக் கேட்காமல் ஆலை விரிவாக்கத்தை செய்துகொள்ளலாம் என பசுமை ஒழுங்குமுறை விதிகளில் மாற்றத்தைக் கொண்டுவந்து, வேதாந்தாவை அனுமதித்துவிட்டு இன்று அதைக் காப்பாற்றுவதற்காகவே திட்டமிட்டு தமிழகத்தில் இருக்கும் தங்களது கைக்கூலி அரசை பயன்படுத்தி, தமிழக மக்கள் மீது போர் தொடுத்துள்ளது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், எடப்பாடி பழனிசாமி போன்றவர்களின் வழியாகவே இந்தப் பச்சைப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. தமிழினத்தை பூண்டோடு ஒழித்துக் கட்டும் தனது வரலாற்று வெறியை இன்று தனக்குக் கிடைத்திருக்கும் அடிமைக் கூட்டத்தைப் பயன்படுத்தி செய்துகொண்டு இருக்கின்றது பார்ப்பனக் கும்பல்.

தங்களது ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக தன் சொந்த நாட்டு மக்களை கொலை செய்யும் இந்தக் கொடிய குற்றக்கும்பலும், அதற்குத் துணையாக இருக்கும் பார்ப்பன தமிழ் தி இந்துவும், தினமலரும் தமிழ் மக்களுக்கு எதிராகச் செய்யும் அனைத்து சதிவேலைகளுக்கும் இந்தத் தமிழினம் ஒருநாள் சரியான பதிலடி கொடுத்து தமிழ்நாட்டை விட்டே ஓட ஒட விரட்டி அடிக்கத்தான் போகின்றார்கள். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் நிச்சயம்.

- செ.கார்கி

Pin It