விநாயகர் சிலை ஊர்வலத்தை, குறித்த நேரத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என்பது உள்பட காவல்துறையின் பல்வேறு கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்:

•             சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டு இருக்க வேண்டும்; இரசாயனம் பயன்படுத்தக் கூடாது.

•             ஊர்வலத்தின்போது மின் கம்பம் மற்றும் பாலத்தின்மீது மோதி சிலைகளை பாதிப்பு ஏற்படும் என்பதால், உயரமான சிலைகள் எடுத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும்.

•             பொது இடங்களில் திடீர் கோவில்கள் அமைத்தல் கூடாது.

•             சிலை அமைப்பாளர்களின் பெயர், முகவரி, தொலை பேசி, அலைபேசி எண்களை காவல் நிலையங்களில் தெரிவிக்க வேண்டும். அலைபேசியை அணைத்து வைக்காமல் இருக்க வேண்டும்.

•             காவல் துறை அனுமதித்த இடங்களில் மட்டுமே சிலைகள் வைக்க வேண்டும்.

•             சிலை வைக்க, கீற்று அல்லது துணியால் வேயப்பட்ட கொட்டகையாக இருக்கக் கூடாது. கல்நார் அல்லது இரும்பு தகடு பயன்படுத்த வேண்டும்.

•             மின் கசிவு ஏற்படாதவாறு ஒயர்கள் இருக்க வேண்டும். அதிக வெளிச்சம் தரக்கூடிய விளக்குகள் பொருத்தக் கூடாது.

•             சிலை அருகே, முன்னெச்சரிக்கையாக இரண்டு வாளி மணல், தண்ணீர், நீளமான இரண்டு கம்புகள் வைத்து இருக்க வேண்டும்.

•             சிலை அருகே புகைப்பிடிப்போரை அனுமதிக்கக் கூடாது.

•             சிலை இருக்கும் கொட்டகையில் தேவையற்ற பொருள்களை வைத்து இருக்கக் கூடாது.

•             24 மணி நேரமும், 25க்கும் மேற்பட்ட இரண்டு  பேரை விழா குழுவினர் பாது காப்புக்கு அமர்த்த வேண்டும்; அவர்களுக்கு அடையாள அட்டை அவசியம்.

•             பெட்டி வடிவ ஒலி பெருக்கியில் அனுமதிக்கப்பட்ட ஒலி அளவையே பயன்படுத்த வேண்டும்.

•             வேகமாக செல்லும் வேன், டாடா ஏஸ் போன்ற வாகனங்களில் தான் சிலைகளை எடுத்து செல்ல வேண்டும். ஊர்வலத்தில் பங்கேற்போர், இரு சக்கர வாகனம் மற்றும் சைக்கிளில் செல்லக் கூடாது.

•             அனுமதிக்கப்பட்ட நேரம் மற்றும் பாதை வழியாகத்தான் சிலைகளை எடுத்துச் செல்ல வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கடலில் கரைக்க வேண்டும்.

•             ஊர்வலம் குறிப்பிட்ட நேரத்தில் நடத்தி முடிக்க வேண்டும்.

•             சிலைகள் ஏற்றிச் செல்லும் வாகனம் பழுதடைய நேரிட்டால் மாற்று வாகனம் தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும்.

•             ஊர்வலத்தின்போது தேவையற்ற இடங்களில் வாகனத்தை நிறுத்தி பிறர் மனம் புண்படும் வகையில், கோஷம் எழுப்புதல், பட்டாசு மற்றும் வாண வேடிக்கை நடத்தக் கூடாது.

•             சிலைகளை கடலில் கரைக்கும்போது, பக்தர்கள் கடலின் ஆழ்பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

•             சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாதவாறு காவல் துறையினருக்கு விழா குழுவினர் தகுந்த ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

இவ்வாறு காவல்துறையின் அறிவிப்பில் கூறப்பட் டுள்ளது. 

காவல்துறை இந்தக் கட்டுப்பாடுகள் கண்துடைப்பாக இருந்துவிடக் கூடாது; கடுமையாக கண்காணிக்க வேண்டும் என்பதே பொது அமைதியை விரும்புவோரின் எதிர்பார்ப்பு.

Pin It