இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் மாநிலங்களில் கிறிஸ்துவ மத நம்பிக்கையாளர்களைவிட மதங்கள் வேண்டாம் என்று கூறுவோர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது தங்களை கிறிஸ்துவர், கத்தோலிக்கர் என்று வெவ்வேறு மத அடையாளங்களைப் பதிவு செய்தவர்கள் மக்கள் தொகை அடிப்படையில் 25 சதவீதம் பேர்.

2014ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் மத நம்பிக்கையாளர்களில் இரண்டு மடங்கு அளவில் மத நம்பிக்கைகளை கைவிட்டு விட்டனர். எங்களுக்கு மதத்தில் நம்பிக்கை இல்லை என்று பதிவு செய்தவர்கள், மக்கள் தொகை எண்ணிக்கையில் 48.5 சதவீதம்.

இங்கிலாந்து சமூகத்தில் கிறிஸ்தவர்களைவிட மத நம்பிக்கையற்றவர்களே அதிகரித்து விட்டனர். இத்தகவலை இது குறித்து ஆய்வு நடத்தி வரும் பேராசிரியர் ஸ்டீபன் புலுவென்ட் (Stephen Bulluvant) கடந்த மே 24ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இவர் இலண்டனில் உள்ள செயின் மேரீஸ் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் இறையியல் துறையின் பேராசிரியர். கடந்த 30 ஆண்டுகளாக மத நம்பிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறார்.

மதம் வலியுறுத்தும் சமூக கட்டமைப்பு, சமூக உறவுகளில் இவர்கள்  வெறுப்படைந்துள்ளதே காரணம் என்கிறார் பேராசிரியர் புலுவென்ட். இந்தியாவை இந்துக்கள் நாடாக மாற்றத் துடிக்கும் இந்துத்துவவாதிகளே! மத நம்பிக்கைகளை தகர்த்துவிட முடியாது என்று பெரியாரியல்வாதிகளுக்கு சவால்விடும்  பழமைவாதிகளே!

உலகத்தில் நிகழத் தொடங்கியிருக்கும் மாற்றங்களைப் பாருங்கள்!